/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அக்., 1 முதல் 14 கோவில்களின் சேவை கட்டணம் உயர்கிறது
/
அக்., 1 முதல் 14 கோவில்களின் சேவை கட்டணம் உயர்கிறது
அக்., 1 முதல் 14 கோவில்களின் சேவை கட்டணம் உயர்கிறது
அக்., 1 முதல் 14 கோவில்களின் சேவை கட்டணம் உயர்கிறது
ADDED : செப் 20, 2025 11:10 PM

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட 14 பெரிய கோவில்களில் சேவை கட்டணம் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டணம், அக்., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இது தொடர்பாக துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது:
கர்நாடகாவில் ஹிந்து அறநிலைய துறைக்கு உட்பட்டு 34,566 கோவில்கள் உள்ளன.
பெங்களூரு மல்லேஸ்வரம் ஸ்ரீயோக நரசிம்ம சுவாமி கோவில், ஸ்ரீநந்தி தீர்த்த சுவாமி கோவில், சிக்கபல்லாபூர் கவுரிபிதனுார் ஸ்ரீவிதுரேஸ்வதா நாராயண சுவாமி கோவில், தலகாயல பெட்டா ஸ்ரீ பூநீல சமேத வெங்கடரமண சுவாமி கோவில்.
தட்சிண கன்னடாவின் குக்கே சுப்பிரமணிய கோவில், ஸ்ரீ மஹாலிங்கேஸ்வர கோவில், ஸ்ரீ மஹாகணபதி கோவில், ஸ்ரீசூர்ய நாராயணசுவாமி கோவில்; பெங்களூரு தெற்கின் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோவில்; சித்ரதுர்கா ஹொசதுர்காவின் ஸ்ரீ ஹாலு ராமேஸ்வரா கோவில்.
ராய்ச்சூரின் ஸ்ரீ சுகுரேஸ்வர சுவாமி கோவில்; உடுப்பியின் துர்கா பரமேஸ்வரி கோவில்; கொப்பாலின் ஹூலிகம்மா கோவில்; மாண்டியா மேலுகோட்டே ஸ்ரீ செலுவநாராயண சுவாமி கோவில் ஆகிய 14 கோவில்களின் சேவை கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.
கர்நாடக ஹிந்து மத நிறுவனங்கள் மற்றும் அறநிலைய துறை சட்டம் - 2002ன்படி, இத்திருத்தம் வழக்கமான நடவடிக்கையாகும்.
இதில் காங்கிரஸ் அரசின் எந்த தலையீடும் இல்லை. இக்கோவில்களில் இருந்து வரும் வருமானம், அரசுக்கோ அல்லது வேறு பயன்பாட்டுக்கோ பயன்படுத்தப்படாது. கோவில் மேம்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
இந்த புதிய கட்டண சேவை, அக்., 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறுகையில், ''ஹிந்து கோவில்கள், பண்டிகைகள், கொண்டாட்டங்களுக்கு தடைகளை உருவாக்குவதில், முதல்வர் சித்தராமையாவுக்கு என்ன மகிழ்ச்சி ஏற்படுகிறது என்று தெரியவில்லை. மாநிலத்தில், 14 பெரிய கோவில்களின் சேவை கட்டணங்களை உயர்த்துவதன் மூலம், ஹிந்துக்களுக்கு மற்றொரு அடியை கொடுத்து உள்ளார்,'' என்றார்.