/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு தசரா மின் அலங்காரங்கள் ஒப்பந்ததாரர்களுக்கு 'செஸ்காம்' அறிவுரை
/
மைசூரு தசரா மின் அலங்காரங்கள் ஒப்பந்ததாரர்களுக்கு 'செஸ்காம்' அறிவுரை
மைசூரு தசரா மின் அலங்காரங்கள் ஒப்பந்ததாரர்களுக்கு 'செஸ்காம்' அறிவுரை
மைசூரு தசரா மின் அலங்காரங்கள் ஒப்பந்ததாரர்களுக்கு 'செஸ்காம்' அறிவுரை
ADDED : ஆக 09, 2025 04:49 AM

மைசூரு: 'மைசூரு தசராவை முன்னிட்டு, சுற்றுலா பயணிரை கவரும் வகையில் நகர் முழுதும் மின் அலங்காரங்கள் இருக்க வேண்டும். அதேவேளையில், பாதுகாப்பு உறுதிப்படுத்தும் வகையில் அமைக்க வேண்டும்' என, மின் துறை ஊழியர்கள், ஒப்பந்ததாரர்களுக்கு, 'செஸ்காம்' எனும் சாமுண்டீஸ்வரி மின் விநியோக நிறுவன அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
மைசூரு தசராவுக்கான ஏற்பாடுகளை மாவட்டத்தின் அனைத்துத் துறை அதிகாரிகள் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். அதுபோன்று 'செஸ்காம்' சார்பில், அதன் நிர்வாக மேலாளர் முனிகோபால் ராஜு தலைமையில் நேற்று முன்னேற்பாடுகள் கூட்டம் நடந்தது.
அப்போது அவர் பேசியதாவது:
வழக்கம் போல் இம்முறையும் நகர் முழுதும் மின் விளக்கு அலங்காரங்கள் வித்தியாசமானதாகவும், பார்வையாளர்களை கவரும் வகையிலும் இருக்க வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இம்முறை மின் அலங்காரம் உலகத்தரத்தில் இருக்க வேண்டும். அதேவேளையில், நிதி நெருக்கடி ஏற்படாத வகையில் அலங்காரங்கள் இருக்க வேண்டும். மின் அலங்காரத்தை பார்க்கவே நகருக்கு பலரும் வருகின்றனர்.
அதேவேளையில், நடப்பாண்டு தசரா காலகட்டத்தில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே, பாதுகாப்பு நடவடிக்கைகளும் ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.
தசரா துவக்க நாளில் இருந்தே மின் அலங்காரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். இதற்கு பொறுப்பேற்றவர்கள், அதை சரியாக கடைபிடிக்க வேண்டும். கடந்தாண்டு சில சாலைகளில் வைக்கப்பட்ட மின் அலங்காரங்கள் சரியாக இல்லை. இம்முறை அதுபோன்று இருக்கக் கூடாது.
அதுபோன்று யுவ தசராவுக்கான மின் அலங்காரங்கள் பார்வையாளர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும். கடந்தாண்டு ட்ரோன் ஷோ, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தாண்டும் இதை பார்க்க ஆவலுடன் இருக்கின்றனர். எனவே, இம்முறை கூடுதலாக ட்ரோன்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.