தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கத்திக்குத்து சம்பவங்கள் ஏழு பேர் அதிரடி கைது

கத்திக்குத்து சம்பவங்கள் ஏழு பேர் அதிரடி கைது

கத்திக்குத்து சம்பவங்கள் ஏழு பேர் அதிரடி கைது


ADDED : மே 04, 2025 12:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 04, 2025 12:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்களூரு: சுஹாஸ் ஷெட்டி கொலை செய்யப்பட்ட அன்று இரவு, இரண்டு வெவ்வேறு இடங்களில் நடந்த கத்திக்குத்து சம்பவங்கள் தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.

மங்களூரின் பஜ்பே கின்னிபதவு பகுதியில், கடந்த 1ம் தேதி இரவு 8:30 மணிக்கு பஜ்ரங் தள் தொண்டர் சுஹாஸ் ஷெட்டியை ஆறு பேர் கும்பல் கொலை செய்தது.

அன்றைய தினம் இரவே மங்களூரின் கண்ணுார் என்ற இடத்தில் நவுசாத், கெஞ்சாடி என்ற இடத்தில் லுக்மான் ஆகிய இருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர்.

நவுசாத்தை கத்தியால் குத்திய வழக்கில் முடிப்பு பகுதியை சேர்ந்த லோகிதாஷ்வா, 32, புனித், 28, கணேஷ் பிரசாத், 23 ஆகியோரை நேற்று கங்கனாடி போலீசார் கைது செய்தனர்.

லுக்மானை கத்தியால் குத்திய பஜ்பேயின் லிகித், 29, ராகேஷ், 34, சூரத்கல்லின் தன்ராஜ், 24, மூடபித்ரியின் பிரசாந்த் ஷெட்டி, 26 ஆகியோரை காவூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

சுஹாஸ் கொலைக்கு பழிவாங்கும் வகையில், சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியிட்டதாக முல்கி, உருவா, பர்கே, மங்களூரு வடக்கு, மங்களூரு தெற்கு, மூடபித்ரி, காவூர் போலீஸ் நிலையங்களில், நேற்று இரவு வரை 12 வழக்குகள் பதிவாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us