தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சாலை விபத்துகளில் ஏழு பேர் உயிரிழப்பு

 சாலை விபத்துகளில் ஏழு பேர் உயிரிழப்பு

 சாலை விபத்துகளில் ஏழு பேர் உயிரிழப்பு


ADDED : பிப் 09, 2026 05:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2026 05:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துமகூரு: கர்நாடகாவின் தனித்தனி இடங்களில் நடந்த சாலை விபத்துகளில், ஏழு பேர் உயிரிழந்தனர்.

 துமகூரு நகரின் பானாவரா அருகில் நேற்று மதியம் வேகமாக சென்ற, மூன்று கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.

இதில் துமகூரின், ஜெயநகரில் வசித்த முரளி, 45, சுரேஷ், 55, உயிரிழந்தனர். ஐவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இவர்கள் ஆதிசுஞ்சனகிரி மடத்துக்கு சென்றுவிட்டு, ஊருக்கு திரும்பும் போது, விபத்து நடந்துள்ளது.

 பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுகாவின் ஹள்ளிகேடா அருகில், நாகண்ணா கிராசில் நேற்று காலை சென்று கொண்டிருந்த பைக், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பாலத்தின் மீது மோதியது. பைக்கில் பயணித்த, பசவகல்யாணா தாலுகாவின் ராஜேஸ்வரா கிராமத்தை சேர்ந்த வெங்கட் கரட்மல், 40, இவரது மனைவி ஷில்பா, 35, மகள் ரக்ஷிதா, 12, ஆகியோர் உயிரிழந்தனர். இவர்கள் பீதருக்கு சென்று விட்டு, தங்களின் கிராமத்துக்கு செல்லும் போது, விபத்து நடந்துள்ளது. விபத்தில் தம்பதியின் மகன் திகம்பர், 15, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

 சிக்கபல்லாபூர் மாவட்டம், சிந்தாமணி புறநகரில் நேற்று காலை சென்று கொண்டிருந்த பைக் மீது, கார் மோதியது. பைக்கில் பயணித்த நாகராஜ், 68, வெங்க டரெட்டி, 50, உயிரிழந்தனர். விபத்துக்கு பின், பைக்கை 200 மீட்டர் துாரம், கார் இழுத்து சென்றுள்ளது. அதன்பின் காரை நிறுத்திவிட்டு ஓட்டுநரும், அதில் இருந்தவர்களும் ஓடிவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us