/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வரும் கல்வியாண்டு முதல் பாலியல் கல்வி; அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
/
வரும் கல்வியாண்டு முதல் பாலியல் கல்வி; அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
வரும் கல்வியாண்டு முதல் பாலியல் கல்வி; அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
வரும் கல்வியாண்டு முதல் பாலியல் கல்வி; அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
ADDED : மார் 25, 2025 01:41 AM

பெங்களூரு : நடப்பு கல்வியாண்டில் இருந்தே, மாணவர்களுக்கு பாலியல் கல்வி அளிக்க, கர்நாடக கல்வித்துறை தயாராகி வருகிறது.
பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி என்பது, பல ஆண்டுகளாக விவாதம் அளவிலேயே இருந்து வருகிறது.
2007ம் ஆண்டில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாலியல் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதற்கு மாணவர்களின் பெற்றோர், பழமைவாதிகள் மற்றும் அரசியல்வாதிகள், கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் விளைவாக கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்கள், பள்ளிகளில் பாலியல் கல்விக்கு தடை விதித்தன.
கர்நாடக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, பாலியல் கல்வி வழங்குவது குறித்து பல்வேறு விவாதங்களும், குழப்பங்களும் எழுந்துள்ளன. சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் உள்ளனர்.
அந்த குழப்பங்களுக்கும், விவாதங்களுக்கும் மாநில அரசு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் இருந்து, பாலியல் கல்வியை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
இதுகுறித்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது:
வரும் 2025- - 26ம் கல்வியாண்டில் இருந்து, பாலியல் கல்வியை துவக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
சிறார்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத தடுக்க, இத்தகைய நடவடிக்கை தவிர்க்க முடியாதது.
இந்தியாவில் பலாத்கார சம்பவங்கள், குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாலியல் கல்வி மாணவர்களுக்கு அவசியம் என, கல்வி வல்லுநர்களும் கூறியுள்ளனர்.
நிகழ் கல்வியாண்டு முதல், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் ஒழுக்கக் கல்வி கட்டாயமாக்கப்படுகிறது. இதன் கீழ் பாலியல் கல்வியும் சேர்க்கப்படும். வாரம் இரண்டு வகுப்புகள் நடத்தப்படும். இந்த வகுப்புகளில் மாணவர்களுக்கு நற்பண்புகளை ஏற்படுத்துவதுடன், பாலியல் தொடர்பான சரியான தகவல்கள் தெரிவித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
பள்ளிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே, பாலியல் கல்வி போதிக்கப்படும். அத்துடன் போலீஸ் அதிகாரிகள், பள்ளிகளுக்கு சென்று போக்சோ சட்டம் குறித்து, மாணவர்களுக்கு தகவல் தெரிவிப்பர். இதனால் சிறார்கள் தங்களின் உரிமைகளை அறிந்து, அபாயமான சூழ்நிலைகளை உணரும் திறன் பெறுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.