/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மலையாள திரைப்பட இயக்குநர் மீதான பாலியல் வழக்கு ரத்து
/
மலையாள திரைப்பட இயக்குநர் மீதான பாலியல் வழக்கு ரத்து
மலையாள திரைப்பட இயக்குநர் மீதான பாலியல் வழக்கு ரத்து
மலையாள திரைப்பட இயக்குநர் மீதான பாலியல் வழக்கு ரத்து
ADDED : ஜூலை 04, 2025 11:22 PM

பெங்களூரு: மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீதான பாலியல் வழக்கை, கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மலையாளத்தில் பிரபல திரைப்பட இயக்குநராக இருப்பவர் ரஞ்சித் பாலகிருஷ்ணன். இவர் மீது மலையாள நடிகர் ஒருவர், கடந்த ஆண்டு கேரளாவின் ஒரு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரில், '2012ம் ஆண்டு இயக்குநர் ரஞ்சித் பாலகிருஷ்ணனுடன், பெங்களூரு சென்றேன்.
விமான நிலையம் அருகில் உள்ள ஹோட்டலில் வைத்து என்னை கட்டாயப்படுத்தி இயற்கைக்கு மாறாக உறவு வைத்தார். என் நிர்வாண புகைப்படத்தை, ஒரு நடிகைக்கு அனுப்பி வைத்தார்' என்று கூறி இருந்தார்.
அந்த புகார், பெங்களூருக்கு மாற்றப்பட்டது. ரஞ்சித் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377ன் (இயற்கைக்கு மாறான உறவு) கீழ் வழக்குப்பதிவானது.
தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் ரஞ்சித் மனு செய்தார். நீதிபதி கிருஷ்ணகுமார் விசாரித்து வந்தார்.
ரஞ்சித் தரப்பில் ஆஜரான வக்கீல் தன் வாதங்களின்போது, 'மனுதாரர் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டு உள்ள ஹோட்டல் 2012ல் அந்த இடத்தில் இல்லவே இல்லை. 2016 முதல் தான் செயல்பட துவங்கி உள்ளது. 2012ல் சம்பவம் நடந்ததாக கூறினாலும் 12 ஆண்டுக்கு பின் தான் புகார் அளித்துள்ளார். இதற்கு சரியான காரணத்தையும் கூறவில்லை. உண்மையை ஆராய்ந்து பார்த்தால் அனைத்தும் தவறானவை' என்று வாதிட்டார்.
இந்த வழக்கில் நேற்று நீதிபதி கிருஷ்ணகுமார் தீர்ப்பு கூறினார். 'மனுதாரர் மீது பிரதிவாதி அளித்த புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை' என்று கூறி, மனுதாரர் மீது பதிவான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.