தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கே.எஸ்.சி.ஏ., தலைவர் தேர்தலில் சாந்தகுமார் போட்டியிடுவது உறுதி

 கே.எஸ்.சி.ஏ., தலைவர் தேர்தலில் சாந்தகுமார் போட்டியிடுவது உறுதி

 கே.எஸ்.சி.ஏ., தலைவர் தேர்தலில் சாந்தகுமார் போட்டியிடுவது உறுதி


ADDED : நவ 30, 2025 04:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 30, 2025 04:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கே.எஸ்.சி.ஏ., தேர்தலில் தலைவர் பதவிக்கு சாந்தகுமாரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்த தேர்தல் அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது,'' என, கர்நாடக உயர்நீதிமன்ற நீ திபதி சூரஜ் கோவிந்தராஜ் உத்தரவிட்டார்.

கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க தலைவர், துணை தலைவர், உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் டிச., 7ல் நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வெங்கடேஷ் தலைமையில் ஒரு அணியினரும், பிரிஜேஷ் பட்டேல் ஆதரவு பெற்ற கர்நாடக ஒலிம்பிக் சங்க முன்னாள் தலைவருமான சாந்தகுமார் தலைமையில் மற்றொரு அணியினரும், கல்பனா வெங்கடாச்சாரும் போட்டியிடுகின்றனர்.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் நவ., 24ல் முடிந்தது. ந வ., 25 மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. இதில், கல்பனா வெங்கடாச்சார், தன் மனுவை வாபஸ் பெற்றார். 200 ரூபாய் சந்தா செலுத்தவில்லை என்பதால் சாந்தகுமார் மனு நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சாந்தகுமார் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி சூரஜ் கோவிந்தராஜ், தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார். நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அப்போது நீதிபதி கூறுகையில், ''சாந்தகுமாரின் வேட்புமனுவை ரத்து செய்த தேர்தல் அதிகாரி பசவராஜுவின் உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது. தலைவர் வேட்பாளர் பட்டியலில் சாந்தகுமார் பெயர் சேர்க்க வேண்டும். திட்டமிட்டபடி டிச., 7 ல் தேர்தல் நடத்தி, அன்றே முடிவு அறிவிக்க வேண்டும்,'' என்றார்.

இதையடுத்து, கே.எஸ்.சி.ஏ., தலைவர் பதவிக்கு வெங்கடேஷ் பிரசாத், சாந்தகுமார் ஆகிய இருவரும் போட்டியிடுவது உறுதி ஆகியுள்ளது.

வரவேற்பு இது வரவேற்கத்தக்க முன்னேற்றம். நான் தகுதியானவன் என்பதை நீதிமன்றம் உறுதி செய்திருப்பது நிம்மதி அளிக்கிறது. இப்போது தேர்தலுக்கான பணியை துவக்கி உள்ளோம். எனக்கு தெரிந்தவரை, தேர்தல் அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்பட்டதால், ஏற்கனவே தாக்கல் செய்த வேட்புமனுவே செல்லுபடியாகும் என்று நினைக்கிறேன். அவரின் உத்தரவை ரத்து செய்யும்படி கேட்டு தான் நீதிமன்றத்தை நாடினோம். சாந்தகுமார், பிரிஜேஷ் அணி வேட்பாளர்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us