தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சென்னகிரியின் சாந்தி சாகர்

 சென்னகிரியின் சாந்தி சாகர்

 சென்னகிரியின் சாந்தி சாகர்


UPDATED : மார் 19, 2026 05:48 AM

ADDED : மார் 19, 2026 05:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2026 05:48 AM ADDED : மார் 19, 2026 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

: தாவணகெரே என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வெண்ணெய் தோசை தான். இந்த தோசையை சாப்பிடுவதற்காகவே, கார், பைக்கில் பல ஊர்களில் இருந்து நிறைய பேர் வருவதும் உண்டு. தாவணகெரே வெண்ணெய்க்கு மட்டும் பேமஸ் இல்லை. சுற்றுலா தலங்களுக்கும் பெயர் போன மாவட்டமாக விளங்குகிறது. இங்கு ஏராளமான கோட்டைகள், ஏரிகள் உள்ளன. அதில் ஒரு ஏரியை பற்றி பார்க்கலாம்.

சென்னகிரி தாலுகா கெரேபீலச்சி கிராமத்தில் சாந்தி சாகர் ஏரி உள்ளது. உள்ளூர் மக்களால் சூளகெரே ஏரி என அழைக்கப்படுகிறது. சுமார் 6,550 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த ஏரிக்கு, ஆசியாவின் 2வது பெரிய ஏரி என்ற பெருமையும் உண்டு. கிட்டத்தட்ட 800 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை கொண்ட ஏரி நிரம்பினால், கடல் போல ரம்மியமாக காட்சி தரும்.



ஏரியை சுற்றி இருபக்கமும் உள்ள மலை முகடுகள் எப்போதும் பச்சை, பசலேன காட்சி அளிக்கின்றன. நுழைவாயில் பகுதியில் காரை நிறுத்தி விட்டு, மணல் மேடு மீது ஏறி சென்றால், ஏரியின் ரம்மியமான அழகை கண்டு ரசிக்கலாம். இந்த ஏரியின் தண்ணீர் தான் சித்ரதுர்கா, தாவணகெரேயில் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.

வி வசாயத்திற்காக இரண்டு கால்வாய் வழியாகவும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஏரியின் அருகே நீரேற்றும் தொட்டி உள்ளது. இதன் மீது ஏறி நின்றும், சுற்றுலா பயணியர் உற்சாகமாக புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மாலையில் சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசிக்க, சூப்பரான இடமாக இந்த ஏரி கரை உள்ளது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us