தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஆஸ்திகா சமாஜ் கல்யாண நகர் சார்பில் சாஸ்தா பிரீத்தி

 ஆஸ்திகா சமாஜ் கல்யாண நகர் சார்பில் சாஸ்தா பிரீத்தி

 ஆஸ்திகா சமாஜ் கல்யாண நகர் சார்பில் சாஸ்தா பிரீத்தி


ADDED : டிச 16, 2025 11:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 11:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பானஸ்வாடி: சிக்கபானஸ்வாடி ஆஸ்திகா சமாஜ் கல்யாண நகர் சார்பில், வரும், 20, 21ம் தேதிகளில் பானஸ்வாடி பிரதான சாலையில் உள்ள சீதா ராமா கல்யாண மண்டபத்தில் சாஸ்தா பிரீத்தி நடக்கிறது.

முதல் நாளான, 20ம் தேதி, மாலை 4:30 முதல் 5:30 மணி வரை விஷ்ணு சஹஸ்ரநாமம், கல்யாண் நகர் பஜனை மண்டலி சார்பில் பஜனை; 6:00 முதல் இரவு 9:30 மணி வரை சம்பரதாயம் மற்றும் மும்பை ஸ்ரீஹரி பாகவதர் குழுவினரின் அய்யப்பன் பஜனை நடக்கிறது.

இரண்டாம் நாளான, 21ல், அதிகாலை 5:30 மணிக்கு வேதமூர்த்தி பிரம்மஸ்ரீ ராமா வாத்தியார் மஹா கணபதி ஹோமம் நடத்துகிறார். 7:30 மணிக்கு மஹன்யாசம், ருத்ராபிஷேகம், கிராமார்ச்சனை, அய்யப்ப சஹஸ்ரநாம அர்ச்சனை, சாஸ்தா பிரீத்தி, மஹா மங்களாரத்தியை பிரதோசம் பூஜை குழுவினர் நடத்துகின்றனர்.

அதனை தொடர்ந்து சாஸ்தா வரவு பாட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us