/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேகதாது திட்டத்துக்கு அனுமதி குமாரசாமிக்கு சிவகுமார் சவால்
/
மேகதாது திட்டத்துக்கு அனுமதி குமாரசாமிக்கு சிவகுமார் சவால்
மேகதாது திட்டத்துக்கு அனுமதி குமாரசாமிக்கு சிவகுமார் சவால்
மேகதாது திட்டத்துக்கு அனுமதி குமாரசாமிக்கு சிவகுமார் சவால்
ADDED : பிப் 06, 2025 11:01 PM

பெங்களூரு: ''மத்திய அமைச்சர் குமாரசாமி, ஏற்கனவே கூறியது போன்று, மேகதாது அணைக்கு அனுமதி பெற்று தரட்டும். அதன்பின் பேசட்டும், என, துணை முதல்வர் சிவகுமார் சவால் விடுத்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
குமாரசாமி, தேவகவுடா அதிகாரத்தில் இருந்த போது, பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் கட்ட, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த பணியை நாங்கள் செய்கிறோம்.
இரண்டாவது விமான நிலையம், பிடதி, நெலமங்களா, துமகூரு, சோலுார் என, எந்த இடத்தில் வர வேண்டும் என்பதை, நாங்கள் முடிவு செய்ய முடியாது.
அந்த விஷயம், எங்கள் அதிகார எல்லைக்குள் வராது. இது குறித்து, விமான நிலைய ஆணையம், பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிர்வாகம் முடிவு செய்யும்.
எங்கள் ஊரில் விமான நிலையம் கட்டப்பட வேண்டும் என்ற ஆசை எனக்கு உள்ளது. ஆனால், எங்களால் முடிவு செய்ய முடியாது. விமான நிலையம் கட்ட வேண்டுமானால், பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
மத்தியில் பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேகதாது திட்டத்துக்கு, ஒரே நாளில் அனுமதி பெற்று தருவதாக, மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியிருந்தார். அவர் கூறியபடி மேகதாது திட்டத்துக்கு, முதலில் அனுமதி பெற்று தரட்டும். அதன்பின் பேசட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

