sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிவகுமார் திறமையான தலைவர் முதல்வர் சித்தராமையா திடீர் புகழாரம்

 சிவகுமார் திறமையான தலைவர் முதல்வர் சித்தராமையா திடீர் புகழாரம்

 சிவகுமார் திறமையான தலைவர் முதல்வர் சித்தராமையா திடீர் புகழாரம்


ADDED : பிப் 23, 2026 04:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 04:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'துணை முதல்வர் சிவகுமார் திறமையான தலைவர்' என்று, முதல்வர் சித்தராமையா ஒப்பு கொண்டு உள்ளார்.

'ஆடு மேய்த்தவர் முதல்வர் ஆனதை எனது எதிரிகளால் பொறுத்து கொள்ள முடியவில்லை; நான் போர் களத்தை விட்டு ஓடும் கோழை இல்லை' என, முதல்வர் சித்தராமையா கடந்த 20ம் தேதி தனது முகநுால் பக்கத்தில் பதிவிட்டது, அரசியலில் விவாதத்தை துாண்டியது.

சமூகநீதி துணை முதல்வர் சிவகுமாரை குறிவைத்தே இப்படி பேசுகிறார் என்றும் பேச்சு எழுந்தது. முதல்வர் பதவியை தக்க வைக்க, ஜாதியின் பெயரால் சித்தராமையா அரசியல் செய்வதாக, மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமியும் விமர்சித்து இருந்தார்.

இதுதொடர்பாக சித்தராமையாவின் நேற்றைய எக்ஸ் வலைதள பதிவு:

சமூகநீதி தினத்தின் ஒரு பகுதியாக நாளிதழ் ஒன்று, நான் எழுதிய கட்டுரையை முகநுால் பக்கத்தில் பதிவிட்டேன். அது இப்போது அரசியல் விவாதத்திற்கு உட்பட்டு உள்ளது. இந்த விவாதத்தை நான் வரவேற்கிறேன்.

சமூகநீதிக்காக நான் பேசுவது இது முதல் முறை அல்ல. எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தவர்களுக்கு மட்டுமே, சமூகநீதிக்கு நான் குரல் எழுப்பியது தெரியும்.

முதல்வர் பதவியை காப்பாற்றி கொள்ள நான் ஜாதியை பயன்படுத்துவதாக, மத்திய அமைச்சர் குமாரசாமி கூறிய கருத்தை நகைச்சுவையாக எடுத்து கொண்டேன். குமாரசாமியும், அவரது தந்தை தேவகவுடாவும் ஜாதி வெறியர்கள் இல்லை.

ஆனால் ஜாதிகளுக்கு எதிரானவர்கள். அவர்கள் குடும்பவாதிகள். ஒக்கலிக சமூகத்தை அவர்கள் ஓட்டு வங்கியாக பயன்படுத்துகின்றனர். ம.ஜ.த.,வில் இருக்கும் ஒக்கலிக தலைவர்களை, அரசியல்ரீதியாக வளரவே விட மாட்டார்கள்.

புட்டசாமி கவுடா, புட்டகவுடா, ஜவரேகவுடா, விஸ்வநாத், ஹனுமேகவுடா, நாககவுடா, கே.ஆர்.பேட் கிருஷ்ணா, ஒய்.கே.ராமையா, பைரேகவுடா, பச்சேகவுடா, சங்கர், செலுவராய சாமி போன்ற ஒக்கலிகர் சமூக தலைவர்கள், ம.ஜ.த.,வில் இருந்தால் தங்களுக்கு மதிப்பு இல்லை என்று தான் அக்கட்சியில் இருந்து வெளியேறினர்.

காங்கிரஸ் கட்சி மட்டுமே ஒக்கலிக சமூக தலைவர்களை அரசியல்ரீதியாக வளர்த்து உள்ளது. கெங்கல் ஹனுமந்தய்யா, கடிதால் மஞ்சப்பா, எஸ்.எம்.கிருஷ்ணாவை முதல்வராக்கி அழகு பார்த்தது காங்கிரஸ் தான்.

தலித் முதல்வர் ஒக்கலிக சமூகத்திற்கு திறமையான தலைமை வழங்க கூடிய சிவகுமார், ஜெயசந்திரா, கிருஷ்ணப்பா, கிருஷ்ணபைரேகவுடா, வெங்கடேஷ் ஆகியோர் எங்களிடம் உள்ளனர்.

தேவகவுடா குடும்பத்தை தவிர ஒக்கலிகர் சமூகத்தில் இருந்து யாராவது ஒருவர் முதல்வராக வருவால் என்றால், அது காங்கிரசில் மட்டுமே சாத்தியம். காங்கிரஸ் சமூக நீதிக்கான கட்சி.

ஒக்கலிகர், லிங்காயத், பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை முதல்வராக்கி உள்ளது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த என்னை அங்கீகரித்து, இரண்டாவது முறையாக முதல்வராக்கி உள்ளனர். இதற்காக சோனியா, ராகுலுக்கு நன்றி கூறுகிறேன்.

காங்கிரசில் இருக்கும் தலித் சமூக தலைவர்களுக்கும், முதல்வராகும் சக்தி உள்ளது. தலித் ஒருவர் கர்நாடக முதல்வராக வந்தால், அது காங்கிரஸ் கட்சியில் இருந்தே சாத்தியமாகும்.

பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி தலித் ஒருவரை முதல்வராக்குமா? நான் ஜாதி அரசியல் செய்வதாக கூறுபவர்கள், முதலில் தங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளட்டும்.

இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us