சிவகுமார் தான் அடுத்த முதல்வர் 'கட் - அவுட்' வைத்த ஆதரவாளர்
சிவகுமார் தான் அடுத்த முதல்வர் 'கட் - அவுட்' வைத்த ஆதரவாளர்
ADDED : மே 14, 2026 12:17 AM

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாரின் பிறந்த நாளை முன்னிட்டு, காங்கிரஸ் அலுவலகம் முன், அவருக்கு வாழ்த்து கூறும் பிளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இதில் அடுத்த முதல்வர் சிவகுமார் என, கூறப்பட்டிருந்தது.
துணை முதல்வர் சிவகுமாரை, கர்நாடக முதல்வராக பார்க்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். இதை அவர்கள் பகிரங்கமாகவே கூறியுள்ளனர்.
வரும், மே 15ல் சிவகுமாரின் பிறந்த நாளை கொண்டாடுகிறார். 'பிறந்த நாளை ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம்' என, சிவகுமார் ஏற்கனவே ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டு உள்ளார்.
ஆனால் தங்கள் தலைவரின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட, ஆதரவாளர்கள் தயாராகி வருகின்றனர்.
அவருக்கு வாழ்த்து கூறி, பிளக்ஸ், பேனர் பொருத்தியுள்ளனர்.
பெங்களூரின், குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் எதிரே, காங்கிரஸ் கமிட்டி செயலர் வீரபத்ரா, வாழ்த்து 'கட் - அவுட்' வைத்துள்ளார். அதில் அடுத்த முதல்வர் சிவகுமார் என, குறிப்பிட்டுள்ளார்.
தன் பிறந்த நாள் பரிசாக, சுப செய்தி வரும் என, கூறியிருந்தார். அவர் முதல்வர் பதவி கிடைக்கும் என, ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த நம்பிக்கையில், அவரை அடுத்த முதல்வர் என, குறிப்பிட்டு, கட் - அவுட் வைத்துள்ளனர். இது அரசியல் வட்டாரத்தில், சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
