'மாஜி' அமைச்சர் நாகேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார்
'மாஜி' அமைச்சர் நாகேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய சிவகுமார்
ADDED : ஆக 19, 2026 11:18 PM

பெங்களூரு: பா.ஜ., அலுவலகத்திற்கு சென்று, முன்னாள் அமைச்சர் நாகேஷ் உடலுக்கு, முதல்வர் சிவகுமார் அஞ்சலி செலுத்தினார்.
கர்நாடகாவில் பா.ஜ., ஆட்சியில் பசவராஜ் பொம்மை முதல்வராக பணியாற்றிய போது, அமைச்சரவையில் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருந்தவர் பி.சி.நாகேஷ், 67. மூளையில் ஏற்பட்ட கட்டியால் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பெங்களூரு ஜெயநகரில் உள்ள மகள் வீட்டில் வசித்தார். நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பால் நாகேஷ் மரணம் அடைந்தார். கட்சியினர், தொண்டர்கள், ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, நாகேஷின் உடல் மல்லேஸ்வரத்தில் உள்ள, பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு நேற்று காலை கொண்டு செல்லப்பட்டது.
முதல்வர் சிவகுமார், பா.ஜ., அலுவலகத்திற்கு சென்று, நாகேஷ் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். எதிர்க்கட்சி தலைவர் அசோக், மத்திய தொழிலாளர் நல இணையமைச்சர் ஷோபா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதை தொடர்ந்து நாகேஷின் உடல் அவரது சொந்த ஊரான துமகூரின் திப்துாருக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு, அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
து மகூரின் திப்துாரில் இருந்து, 2008, 2018 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, கர்நாடக சட்டசபைக்கு நாகேஷ் தேர்வானவர். ஏ.பி.வி.பி., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புகளில் பணியாற்றியுள்ளார்.
நாகேஷ் மறைவுக்கு கர்நாடக சட்டசபையில் நேற்று இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
