ADDED : ஆக 19, 2026 11:18 PM
அ நிறம் | அளவு
கோலார்: ''கோலாரில், அரசு மருத்துவக் கல்லுாரி அமைக்க விரைவில், 24 ஏக்கர் நிலம் வழங்கப்படும்,'' என, கோலார் மாவட்ட கலெக்டர் ரவிக்குமார் தெரிவித்தார்.
கோலார் மாவட்ட நிர்வாக அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:
கோலார் மாவட்டத்திற்கு கிடைத்துள்ள மற்றும் கிடைக்க வேண்டிய அடிப்படை வசதிகளை, கிராமப்புறங்களின் கடைக்கோடியில் வசிக்கும் விவசாயிகள் ஏழை, நடுத்தர மக்களுக்கு சென்று சேர்ப்பதே எனது விருப்பம்.
கோலார் மாவட்டத்திற்கு அரசு மருத்துவக் கல்லுாரி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகவும், அதன் அமைப்புக்கு தடையாக இருந்த வன நிலம் தொடர்பான பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது.
கோலார் நகரின் புறநகரில் உள்ள சானிட்டோரியம் பகுதியில், 24 ஏக்கர் நிலம், மருத்துவக் கல்லுாரி அமைப்பதற்காக விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
