/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமார் முதல்வராக சபரிமலையில் பிரார்த்தனை
/
சிவகுமார் முதல்வராக சபரிமலையில் பிரார்த்தனை
ADDED : நவ 21, 2025 06:04 AM

சிவகுமார் முதல்வராக வேண்டும் என, சபரிமலையில் அவரது ஆதரவாளர்கள் பிரார்த்தனை செய்துள்ளனர்.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், ஆதரவாளர்கள் ஆசைப்படுகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு தெற்கு மாவட்டம், சென்னப்பட்டணா ஹனியூர் கிராமத்தில் வசிக்கும், காங்கிரஸ் தொண்டர்கள் மாலை அணிந்து, கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று உள்ளனர்.
சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று எழுதப்பட்டு இருந்த போஸ்டர்களை கையில் பிடித்தபடி நடந்து சென்றனர். இது கோவிலுக்கு வந்த கர்நாடக பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.
ஹனியூர் கிராமத்தின் காந்தராஜ் கூறுகையில், ''கர்நாடகாவில் 2023 தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சிக்கு வந்ததில் சிவகுமார் பங்களிப்பு அதிகம்.
இதனால் அவர் முதல்வராக வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.
இதற்காக அய்யப்பனிடம் பிரார்த்தனை செய்திருக்கிறோம். 2028 தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று, சிவகுமார் முதல்வராவார் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார்.
- நமது நிருபர் -

