/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி; மத்திய அமைச்சரிடம் சிவகுமார் கோரிக்கை
/
மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி; மத்திய அமைச்சரிடம் சிவகுமார் கோரிக்கை
மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி; மத்திய அமைச்சரிடம் சிவகுமார் கோரிக்கை
மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி; மத்திய அமைச்சரிடம் சிவகுமார் கோரிக்கை
ADDED : ஜூலை 09, 2025 12:51 AM

“மேகதாது திட்டத்திற்கு விரைவில் அனுமதி கொடுங்கள்,” என, மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலிடம், கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் நேற்று டில்லி சென்றார். அங்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், இணை அமைச்சர் சோமண்ணாவை சந்தித்து பேசினார்.
பின், சிவகுமார் அளித்த பேட்டி:
ஹாசன், கோலார், துமகூரு, பெங்களூரு ரூரல் மாவட்டங்களின், குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில், எத்தினஹொளே குடிநீர்த் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வனப்பகுதி வழியாக நடக்கும் பணிகளுக்கு, மத்திய வனத்துறையின் ஆட்சேபனை இருந்தது. இதனால் மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவை சந்தித்து திட்டம் குறித்து விளக்கம் அளித்தேன்.
ஏறக்குறைய 70 சதவீத பணிகள் முடிந்துள்ளன. இது சிறந்த குடிநீர்த் திட்டம், இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆசியாவிலேயே மிக நீளமான, தொட்டி பாலம் கட்டப்பட்டுள்ளது பற்றியும் எடுத்துக் கூறினேன்.
என் விளக்கத்தால் திருப்தி அடைந்த அவர், மத்திய வனத்துறையின் ஆட்சேபனையை நீக்குவதாக உறுதி அளித்தார். மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீல், இணை அமைச்சர் சோமண்ணாவை சந்தித்து, கலசா - பண்டூரி கூட்டு குடிநீர்த் திட்டத்திற்கு, கோவா மாநிலம் தெரிவிக்கும் ஆட்சேபனை பற்றி எடுத்துக் கூறினேன். மகதாயி நதிநீர் பிரச்னை, கிருஷ்ணா மேலணை திட்டம் பற்றியும், அவரிடம் விளக்கமாக கூறினேன்.
குறிப்பாக மேகதாது திட்டத்திற்காக சமர்ப்பிக்கப்பட்ட, விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி கொடுத்து, விரைவில் திட்டத்தை துவங்க அனுமதி கொடுங்கள் என்று, வலியுறுத்தி உள்ளேன். பத்ரா மேலணை திட்டத்திற்கு மத்திய அரசு அறிவித்த 5,300 கோடி ரூபாய், நிதியை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -