/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையாவுக்கு ஆதரவாக நிற்பேன் சட்டசபையில் சிவகுமார் திட்டவட்டம்
/
சித்தராமையாவுக்கு ஆதரவாக நிற்பேன் சட்டசபையில் சிவகுமார் திட்டவட்டம்
சித்தராமையாவுக்கு ஆதரவாக நிற்பேன் சட்டசபையில் சிவகுமார் திட்டவட்டம்
சித்தராமையாவுக்கு ஆதரவாக நிற்பேன் சட்டசபையில் சிவகுமார் திட்டவட்டம்
ADDED : பிப் 03, 2026 06:12 AM

பெங்களூரு: ''முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாக நிற்பேன்,'' என, சட்டசபையில் துணை முதல்வர் சிவகுமார் கூறினார்.
கர்நாடகா சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது, நேற்று மதியம் முதல்வர் சித்தராமையா பேசிய போது, முதல்வர் பதவி குறித்து, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு துணை முதல்வர் சிவகுமார் பதில் அளித்து பேசியதாவது:
அசோக் நீங்கள் மூத்த அரசியல்வாதி. யாருடைய வார்த்தைகளையும் நான் பெரிதாக எடுத்து கொள்வது இல்லை. காங்கிரசில் மாணவர் அமைப்பில் இருந்து வளர்ந்தேன்.
இளம் வயதிலேயே எனக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட, கட்சி சீட் வழங்கியது. அங்கிருந்து இப்போது வரை அரசியலில் படிப்படியாக வளர்ந்து உள்ளேன்.
அரசியலில் ஏற்றத்தாழ்வு இயல்பானது. நானும் பல ஏற்றத்தாழ்வுகளை கண்டு இருக்கிறேன். வீழ்ந்து இருக்கிறேன்; எழுந்து இருக்கிறேன்; சிறையில் இருந்து இருக்கிறேன்.அரசியலில் எல்லாமே சாத்தியம்.
தைரியம் உள்ள ஒருவரால் மட்டுமே பெரும்பான்மையை பெற முடியும். முதல்வர் சித்தராமையாவும், காங்கிரசின், 139 எம்.எல்.ஏ.,க்களும் எனது பலம். நாங்கள் இருவரும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற நினைக்கிறோம். சித்தராமையாவுக்கு ஆதரவாக நான் நிற்பேன். அவரும் எனக்கு ஆதரவாக இருப்பார்.
எங்கள் கட்சியாக இருந்தாலும் சரி, உங்கள் கட்சியாக இருந்தாலும் சரி, முதல்வர் யார் என்பதை, கட்சி மேலிடம் தீர்மானிக்கிறது. உங்கள் அரசில் பல முதல்வர்கள் மாறினர். எனவே, உங்கள் வார்த்தைகளை கண்டு நான் அசைய மாட்டேன். நீங்கள் கவலையே பட வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.

