/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமார் முதல்வராவார்: சுரேஷ் நம்பிக்கை
/
சிவகுமார் முதல்வராவார்: சுரேஷ் நம்பிக்கை
ADDED : ஜூலை 03, 2025 10:57 PM

பெங்களூரு: “துணை முதல்வர் சிவகுமார் முதல்வராக வேண்டும் என்ற ஆசை, எனக்கும் உள்ளது. அவர் என்றாவது ஒரு நாள், முதல்வராவார் என்ற நம்பிக்கை உள்ளது,” என, காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷ் தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் நேற்று அளித்த பேட்டி:
துணை முதல்வர் சிவகுமார், கட்சிக்கு கட்டுப்பட்ட சிப்பாய்.
இதையே கட்சி மேலிட தலைவர்களும் கூறியுள்ளனர். கட்சி ஒழுங்கை பின்பற்றுகிறார். என் சகோதரர் சிவகுமாரை, முதல்வராக பார்க்க வேண்டும் என்ற ஆசை, எனக்கும் உள்ளது.
இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் அவர் முதல்வராவார் என்ற நம்பிக்கை, எங்களுக்கு உள்ளது. இந்த நம்பிக்கை எப்போதும் இருக்கும்.
சிவகுமார் கட்சிக்காக உழைத்தவர். அதற்கான பலன் கிடைக்கும். அவர் இயலாமையில் இல்லை. கட்சி மீதான கவுரவத்தால், அமைதியாக இருக்கிறார். கட்சி தலைவராக நேர்மையுடன் பணியாற்றுகிறார்.
ஐந்தாண்டுகளும் தானே முதல்வர் என, சித்தராமையா கூறியதில் எந்த தவறும் இல்லை. அவர் தற்போது முதல்வராக இருக்கிறார். இனியும் பதவியில் நீடிப்பதாக கூறியுள்ளார்.
அவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவர். ஆட்சியை மக்கள் காங்கிரசிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் எதிர்பார்ப்பின்படி அரசு நடக்க வேண்டும்.
சிவகுமாரும், சித்தராமையாவும் ஒன்றாக உள்ளனர். இனியும் இப்படியே இருப்பர். கடவுள் அவரவர் தலையில், நீ முதல்வராகு, நீ எம்.எல்.ஏ.,வாகு என, எழுதியிருக்க வேண்டும். அப்போதுதான் அதன்படி நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.