/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாக்குறுதியை சித்து காப்பாற்றுவார் சிவகுமார் தம்பி சுரேஷ் நம்பிக்கை
/
வாக்குறுதியை சித்து காப்பாற்றுவார் சிவகுமார் தம்பி சுரேஷ் நம்பிக்கை
வாக்குறுதியை சித்து காப்பாற்றுவார் சிவகுமார் தம்பி சுரேஷ் நம்பிக்கை
வாக்குறுதியை சித்து காப்பாற்றுவார் சிவகுமார் தம்பி சுரேஷ் நம்பிக்கை
ADDED : நவ 21, 2025 06:18 AM

பெங்களூரு: கொடுத்த வாக்குறுதியை சித்தராமையா காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக, சிவகுமாரின் முதல்வர் பதவிக்காக அவரது தம்பி சுரேஷ் புதிய தாளம் போட்டுள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சமீபத்தில் டில்லி சென்றபோது, முதல்வர் சித்தராமையாவை சந்தித்தேன். முதல்வர் பதவி மாற்றம், அமைச்சரவை விரிவாக்கம் பற்றி அவருடன் விவாதிக்கவில்லை. நான் அவ்வளவு பெரியவனும் இல்லை.
முதல்வர், அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு தெரியும். முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார். இம்முறையும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வந்தார்.
கொடுத்த வாக்குறுதியை மீறாதவர் அவர். தன் வார்த்தையை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
முதல்வர் மாற்றம் குறித்து முடிவு எடுக்க வேண்டியது கட்சி மேலிடம். சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். தலைவிதி இருந்தால் என் அண்ணன் முதல்வர் ஆவார்.
கட்சி என்ன சொன்னாலும் முதல்வரும், துணை முதல்வரும் கேட்பர். சிவகுமார் தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ளார். நாளை, வேறு யாராவது தலைவர் ஆனாலும், அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார். புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்க அவர் ஏற்கனவே தயாராகிவிட்டார்.
எட்டு ஆண்டுகள் தலைவர் பதவியில் இருந்து, சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் துளியும் இல்லை.
அரசியல்வாதி தொடர்ந்து அரசியலில் நீடிக்க வேண்டும் என்றால், மக்களுக்கு அல்லது மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிபடி செயல்பட வேண்டும்.
இப்படி செய்தால் என்றென்றும் தலைவராக இருக்க முடியும். சிவகுமாரின் உழைப்புக்கு என்றாவது ஒரு நாள் பலன் கிடைக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.

