/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவராம் காரந்த் லே - அவுட் பணிகள் மூன்று மாதங்களில் முடிக்க உத்தரவு
/
சிவராம் காரந்த் லே - அவுட் பணிகள் மூன்று மாதங்களில் முடிக்க உத்தரவு
சிவராம் காரந்த் லே - அவுட் பணிகள் மூன்று மாதங்களில் முடிக்க உத்தரவு
சிவராம் காரந்த் லே - அவுட் பணிகள் மூன்று மாதங்களில் முடிக்க உத்தரவு
ADDED : ஏப் 13, 2025 07:20 AM
பெங்களூரு: பெங்களூரு வடக்கு தாலுகா எலஹங்கா - ஹெசருகட்டா இடையில் எழுத்தாளர் சிவராம் காரந்த் பெயரில் லே - அவுட் அமைக்க 2008ல் அறிவிப்பு வெளியானது. இந்த பணிக்காக 3,456 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பணிகளுக்காக ஏராளமான கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு இருந்தது. 2,782 ஏக்கரில் 30,000 வீட்டுமனைகள் அமைக்கும் பணி நடக்கிறது. பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
கெம்பேகவுடா லே - அவுட்டிற்கு பின், பி.டி.ஏ., பெரிய லே - அவுட் எதையும் அமைக்கவில்லை. இதனால் இங்கு வீட்டுமனை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு 17,000 வீட்டுமனைகள் ஒதுக்கியது போக, மீதம் உள்ள வீட்டுமனைகளை பொதுமக்களுக்கு விற்க பி.டி.ஏ., திட்டமிட்டு உள்ளது. ஒரு சதுர அடிக்கு 4,900 ரூபாய் என்றும் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து பி.டி.ஏ., நிர்வாக இன்ஜினியர் மோகன் குமார் கூறுகையில், ''சிவராம் காரந்த் லே - அவுட்டில் பெரும்பாலான பணிகள் முடிந்துவிட்டன.
குடிநீர் குழாய் இணைப்புகள், கழிவுநீர் குழாய் நிறுவும் பணிகள் நடக்கின்றன. சில பிரச்னைகளை தீர்க்காமல் வீட்டுமனை ஒதுக்க பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பம் வாங்குவதாக பி.டி.ஏ., மீது குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
நீதிமன்றத்திலும் லே - அவுட் தொடர்பான வழக்கு உள்ளது. அந்த வழக்கு தீர்ந்ததும், பொதுமக்களிடம் இருந்து விண்ணப்பம் வாங்கப்படும். மீதம் உள்ள பணிகளை மூன்று மாதங்களில் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிட்டு உள்ளோம்,'' என்றார்.

