UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 08:24 PM

அ நிறம் | அளவு
தங்கவயல்: மாரிகுப்பம் பிராங்க் அண்டு கோ மைதானத்தில் நடந்த சிறுவர்களுக்கான கால்பந்து போட்டியில் சிவராஜ்நகர்
சூப்பர் ஸ்ட்ரைக் அணி வெற்றி பெற்றது.
தங்கவயலில் நேற்று முன்தினம், 15 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் கால்பந்து போட்டியில் எட்டு அணிகள் விளையாடின.
இறுதி ஆட்டத்தில் உரிகம் சிவராஜ்நகரின் சூப்பர் ஸ்ட்ரைக் அணியும், அசோக்நகரின் சி.ஆர்., செவன்ஸ் அணியும் மோதின.
இதில் சி.ஆர்., செவன்ஸ் அணிக்கு எதிராக சூப்பர் ஸ்ட்ரைக் அணி, 4 கோல் போட்டு வெற்றி பெற்றது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜான் கென்னடி, வின்னர், ரன்னர் அணிகளுக்கு கோப்பைகளை வழங்கினார்.
