தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூரில் காற்றின் தரம் சீராக உள்ளது என அறிக்கை

பெங்களூரில் காற்றின் தரம் சீராக உள்ளது என அறிக்கை

பெங்களூரில் காற்றின் தரம் சீராக உள்ளது என அறிக்கை


UPDATED : அக் 23, 2026 12:00 AM

ADDED : அக் 22, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2026 12:00 AM ADDED : அக் 22, 2026 08:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘பெங்களூரில் காற்றின் தரம் சீராக உள்ளது’ என, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை அளித்துள்ளது.

வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பெங்களூரின் பீன்யா, மைசூரு சாலை, மெஜஸ்டிக் ஆகிய பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 100 –- 115 என்ற அளவை தாண்டி உள்ளது.

அதுபோல, ஜெயநகர், மல்லேஸ்வரம், சதாசிவநகர் பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு 50 -– 70 என்ற அளவில் உள்ளது. இது, காற்றின் தரம் நன்றாக உள்ளதைக் காட்டுகிறது.

சராசரியாக, பெங்களூரில் காற்றின் தரக்குறியீடு 68 ஆக உள்ளது. இது, காற்றின் தரம் சீராக உள்ளதை காட்டுகிறது.

மற்ற மாவட்டங்களான குடகு 40 – 50; தட்சிண கன்னடா 45 – 55; உடுப்பி 45 – 55; மைசூரு 50 – 60; ஷிவமொக்கா மற்றும் சிக்கமகளூரு 50 – 60; ஹூப்பள்ளி 60 – 70 என, காற்றின் தரம் நன்றாகவே உள்ளது.

இருப்பினும், முதியவர்கள், குழந்தைகள், ஆஸ்துமா, இதய பிரச்னை உள்ளவர்கள் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, முகக்கவசம் அணிய வேண்டும். டில்லி உள்ளிட்ட வட மாநில நகரங்களுடன் ஒப்பிடுகையில், கர்நாடகாவில் காற்றின் தரம் சிறப்பாகவே உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us