/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருத்துவமனை பதிவேட்டில் சினிமா பாடலால் அதிர்ச்சி
/
மருத்துவமனை பதிவேட்டில் சினிமா பாடலால் அதிர்ச்சி
ADDED : ஜூலை 17, 2025 10:56 PM

பெங்களூரு: அரசு பொது மருத்துவமனையின், வெளி நோயாளிகள் பதிவேட்டில், சினிமா பாடல் எழுதி வைத்திருப்பது, லோக் ஆயுக்தா சோதனையில் தெரிய வந்துள்ளது.
கலபுரகி மாவட்டம், ஜேவர்கி தாலுகாவின், மாரடகி எஸ்.ஏ., கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், இரண்டு நாட்களுக்கு முன், மதிய உணவு சாப்பிட்ட 70க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் உடல் நிலை பாதிக்கப்பட்டனர். இவர்கள் ஜேவர்கி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர்.
இவர்களை நலம் விசாரிக்கும் நோக்கில், லோக் ஆயுக்தா எஸ்.பி., சித்தராஜு, டெபுடி எஸ்.பி., கீதாவுடன், நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு வந்திருந்தார். மாணவர்களிடம் நலம் விசாரித்தனர். அவர்களின் உடல் நிலை குறித்து, டாக்டர்களிடம் தகவல் கேட்டறிந்தார்.
அதன்பின் வெளி நோயாளிகள் பிரிவு வருகை பதிவேட்டை லோக் ஆயுக்தா எஸ்.பி., ஆய்வு செய்தார். அதில் மருத்துவமனை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு பதிலாக, திரைப்பட பக்தி பாடல் எழுதி வைத்திருப்பது தெரிந்தது.
இதை கண்டு லோக் ஆயுக்தா எஸ்.பி., சித்தராஜு, அதிருப்தி தெரிவித்தார். பாடலை எழுதி வைத்த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

