ADDED : ஏப் 29, 2025 06:22 AM

தட்சிண கன்னடா: 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் மொபைல் போனில் பல பெண்களின் அந்தரங்க புகைப்படம், வீடியோ இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியானது.
தட்சிண கன்னடா, பெல்தங்கடியை சேர்ந்தவர் சையத், 24. வாலிபால் பயிற்சியாளர். இவர், கடந்த சில நாட்களாக அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு, மொபைல் போனில் ஆபாச புகைப்படங்கள், குறுந்தகவல்கள் அனுப்பி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார்.
இந்த விஷயத்தை அறிந்த ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர், 26ம் தேதி சையத்தை அடித்து உதைத்தனர். அவரது மொபைல் போனை வாங்கினர். அதை பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமிக்கு ஆபாசமாக குறுந்தகவல்கள் அனுப்பியது மட்டுமின்றி, அவரது மொபைல் போனில் பல பெண்களின் அந்தரங்க புகைப்படம், வீடியோ இருப்பது தெரிந்தது. அவரை உடனடியாக பெத்லங்கடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரின் மொபைல் போனை வாங்கி, போலீசார் பரிசோதித்தனர்.  சிறுமிக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியது, பல பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் இருப்பது தெரிந்தது.
'போக்சோ' வழக்கில், சையத் கைது செய்யப்பட்டார். மற்ற பெண்களுடனான தொடர்பு பற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதேபோல சையத் தரப்பில், அவரை தாக்கிய ஹிந்து அமைப்பினர் மனோஜ், பிரஜ்வல் கவுடா ஆகியோர் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

