/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காபி துாளுக்கு கூடுதலாக ரூ.5 வசூலித்த கடைக்கு ரூ. 20,000 அபராதம் விதிப்பு
/
காபி துாளுக்கு கூடுதலாக ரூ.5 வசூலித்த கடைக்கு ரூ. 20,000 அபராதம் விதிப்பு
காபி துாளுக்கு கூடுதலாக ரூ.5 வசூலித்த கடைக்கு ரூ. 20,000 அபராதம் விதிப்பு
காபி துாளுக்கு கூடுதலாக ரூ.5 வசூலித்த கடைக்கு ரூ. 20,000 அபராதம் விதிப்பு
ADDED : ஏப் 27, 2025 04:33 AM
விஜயபுரா : வாடிக்கையாளரிடம் காபி துாள் பாக்கெட்டுக்கு ஐந்து ரூபாய் கூடுதலாக வசூலித்த கடைக்கு, நுகர்வோர் நீதிமன்றம் 20,000 ரூபாய் அபராதம் விதித்தது.
விஜயபுரா நகரில் வசிப்பவர் குஷப் ருனவால். இவர் ஜனவரி 31ம் தேதி, விஜயபுரா நகரின், சோலாபுரா சாலையில், 'சுபஸ்ரீ சாகரா' ஹோட்டல் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், 40 ரூபாய் கொடுத்து பில்டர் காபி துாள் வாங்கினார்.
வீட்டுக்கு சென்று காபி துாள் பாக்கெட் மீது குறிப்பிட்டிருந்த விலையை கவனித்தபோது, 35 ரூபாய் என, இருந்தது. ஐந்து ரூபாய் கூடுதலாக வசூலித்திருப்பது தெரிந்தது. கடைக்கு சென்று கூடுதலாக பெற்ற ஐந்து ரூபாயை திருப்பித்தரும்படி கேட்டார். ஆனால் கடைக்காரர் தர மறுத்தார்.
இது குறித்து, விஜயபுரா மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் குஷப் ருனவால் புகார் அளித்தார். விசாரணையில் கடைக்காரர் அதிகபட்ச சில்லறை விலையை விட, கூடுதலாக ஐந்து ரூபாய் வசூலித்திருப்பது உறுதியானது.
எனவே மனுதாரருக்கு ஆறு சதவீதம் ரூபாய் வட்டியுடன், 15,000 ரூபாய், வழக்கு செலவாக 5,000 ரூபாய் வழங்கும்படியும், ஒரு மாதத்துக்குள் இந்த தொகையை வழங்க வேண்டும் என்றும் நேற்று முன் தினம், கடை உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஐந்து ரூபாய்க்கு ஆசைப்பட்ட கடைக்காரர், இப்போது 20,000 ரூபாய் வழங்க வேண்டியுள்ளது.

