/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பெயர் பலகையில் 60 சதவீத கன்னடம் இல்லாவிடில் கடை உரிமம் ரத்தாகும்'
/
'பெயர் பலகையில் 60 சதவீத கன்னடம் இல்லாவிடில் கடை உரிமம் ரத்தாகும்'
'பெயர் பலகையில் 60 சதவீத கன்னடம் இல்லாவிடில் கடை உரிமம் ரத்தாகும்'
'பெயர் பலகையில் 60 சதவீத கன்னடம் இல்லாவிடில் கடை உரிமம் ரத்தாகும்'
ADDED : ஜூலை 22, 2025 04:51 AM
பெங்களூரு: 'கடையின் பெயர் பலகையில் 60 சதவீதம் கன்னடம் இல்லையெனில், கடையின் உரிமம் ரத்து செய்யப்படும்' என, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில் உள்ள எழுத்துகளில் 60 சதவீதம் கன்னடம் இடம் பெற வேண்டும் என மாநில அரசு, கடந்த ஆண்டு பிப்ரவரியில் சட்டம் இயற்றியது.
இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டாலும், நகரில் உள்ள பெரும்பாலான கடைகளின் பெயர் பலகைகளில், ஆங்கில எழுத்துகளே காணப்படுகின்றன.
இந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னடம் இல்லாத 50,382 கடைகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதில், 49,995 கடைகளின் உரிமையாளர்கள், வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை பின்பற்றி, கடைகளில் கன்னட எழுத்து கொண்ட பெயர் பலகைகளை மாற்றி உள்ளனர்.
மீதமுள்ள 387 கடைகளி ல் இன்னும் பெயர் பலகைகள் மாற்றப்படவில்லை. இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அறிவிப்புகளை பின்பற்றவில்லை என்றால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படு ம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.