பூங்காக்களில் குறும்படம் படப்பிடிப்புக்கு அனுமதி
பூங்காக்களில் குறும்படம் படப்பிடிப்புக்கு அனுமதி
ADDED : மார் 28, 2026 04:30 AM

தோட்டக்கலை மஹாதேவபுரா, கே.ஆர்.,புரம் மண்டலத்தில் மொத்தம், 54 பூங்காக்கள் உள்ளன. இவைகளின் பராமரிப்புக்கு ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பூங்காக்களை சுற்றிலும் இரும்பு வேலி அமைக்க, 7.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ஏரிகளில் உள்ள பூங்காக்கள் உட்பட அனைத்து பூங்காக்களையும் மேம்படுத்த, 17.50 கோடி ரூபாய் செலவிடப்படும்
'பிராண்ட் பெங்களூரு' / 'பசுமை பெங்களூரு' திட்டத்தின் கீழ், புதிய நர்சரி மையங்கள் அமைக்க, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு
குறும்படம், டிவி நாடகங்கள், திரைப்படங்கள் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்து, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பூங்காக்கள் மேம்பாட்டுக்கு பயன்படுத்த திட்டம்.
பொது சுகாதாரம் கிழக்கு மாநகராட்சி எல்லைக்குள், 'பிராண்ட் பெங்களூரு - சுகாதாரம்' திட்டத்தின் கீழ், 15 ஆரம்ப சுகாதார நிலையம், 10 நம்ம கிளினிக்குகள் அமைக்க 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு
ஆரம்ப சுகாதார நிலையங்களின் மேம்பாடு, விரிவாக்கம், உபகரணங்களை வாங்க, 6.8 கோடி ரூபாய் ஒதுக்கீடு
இந்திரா உணவகங்களின் ஆண்டு பராமரிப்புக்கு, ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு
கொசு கட்டுப்பாடு, பல்ஸ் போலியோ முகாம்கள், சுகாதார விழிப்புணர்வு முயற்சிகள் போன்ற பொது சுகாதார திட்டங்களுக்காக, 4.80 கோடி ரூபாய் ஒதுக்கீடு
