/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரு மாவட்ட மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை
/
மைசூரு மாவட்ட மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை
மைசூரு மாவட்ட மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை
மைசூரு மாவட்ட மருத்துவமனையில் டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை
ADDED : டிச 09, 2025 06:25 AM

மைசூரு: மைசூரு மாவட்ட மருத்துவமனையில் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை அதிகம் உள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
மைசூரு நகரின், கே.ஆர்.எஸ்., சாலையில் அரசு மாவட்ட மருத்துவமனை உள்ளது. இது 300 படுக்கை வசதிகள் கொண்டது. ஆனால் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதால், முழுமையான அளவில் நோயாளிகளை அனுமதிப்பதில்லை. 200 படுக்கைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
மைசூரு நகரில் உள்ள கே.ஆர்.நகர் மருத்துவமனை, பெரிய மருத்துவமனையாகும். இங்கு அதிக அளவில் நோயாளிகள் சிகிச்சைக்கு வந்ததால், மருத்துவமனைக்கு அழுத்தம் அதிகரித்தது. எனவே நோயாளிகளின் வசதிக்காக, கே.ஆர்.எஸ்., சாலையில் 13.11 ஏக்கர் பரப்பளவில், 75 கோடி ரூபாய் செலவில், மற்றொரு மாவட்ட அரசு மருத்துவமனை கட்டப்பட்டது. 2017 ஜூன் 29ல் பணிகள் துவங்கி, 2018 இறுதியில் முடிந்தது.
கடந்த 2020 ஜனவரி 23ல், திறக்கப்பட்டது. அப்போது கொரோனா உச்சத்தில் இருந்ததால், இந்த மருத்துவமனை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டது. அதன்பின் மாவட்ட மருத்துவமனையாக செயல்படுகிறது. ஆனால் இந்த மருத்துவமனையில் தேவையான அளவில் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் இல்லை. மகப்பேறு வல்லுநர், சிறப்பு மருத்துவ நிபுணர்கள், அவசர சிகிச்சை பிரிவுக்கு டாக்டர்கள் நியமிக்கப்படவில்லை.
பச்சிளம் குழந்தைகள் பிரிவு, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு, தீக்காயங்கள் பிரிவு உட்பட, மற்ற பிரிவுகளுக்கு டாக்டர்கள், நர்ஸ்கள் பற்றாக்குறை உள்ளது. தேவையான அடிப்படை வசதிகளும் இல்லை. உடனடியாக டாக்டர்கள், மருத்துவ ஊழியர்களை நியமிக்க வேண்டும். அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என, நோயாளிகள் வலியுறுத்துகின்றனர்.
இந்த மருத்துவமனையில், 'சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேனிங் இயந்திரங்கள் இல்லை. சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் தனியார் ஸ்கேன் சென்டருக்கு சென்று, அதிக பணம் செலுத்தி ஸ்கேன் செய்து கொள்கின்றனர்.

