/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொலையானவர் வீட்டுக்கு செல்ல வேண்டுமா? அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கேள்வி
/
கொலையானவர் வீட்டுக்கு செல்ல வேண்டுமா? அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கேள்வி
கொலையானவர் வீட்டுக்கு செல்ல வேண்டுமா? அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கேள்வி
கொலையானவர் வீட்டுக்கு செல்ல வேண்டுமா? அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கேள்வி
ADDED : மே 10, 2025 11:42 PM

தட்சிண கன்னடா: ''கொலைகள் நடந்து கொண்டே தான் இருக்கும். அனைவரின் வீட்டுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை,'' என, மாநில சுகாதாரம், சுகாதாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
சமீபத்தில் கொலையான மங்களூரில் பஜ்ரங்தள் பிரமுகர் சுகாஸ் ஷெட்டி வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறவில்லையென உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மீது பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டினர். இதற்கு பரமேஸ்வரும், விளக்கம் அளித்துவிட்டார்.
இந்நிலையில், மங்களூரில் நேற்று அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:
சுகாஸ் ஷெட்டி ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது அரசுக்கு தெரியும். அவரை கொன்றவர்களை போலீசார் கைது செய்துவிட்டனர். இதில், யாரையும் பாதுகாக்கும் வகையில் அரசு செயல்படவில்லை.
கொலைகள் நடந்து கொண்டே தான் இருக்கும். அனைவரின் வீட்டுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கைதானவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வழக்கு விசாரணையை, என்.ஐ.ஏ., எனும் தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக, பா.ஜ.,வினர் இட்டுகட்டிச் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு நாங்கள் பதில் சொல்ல முடியாது. அவர்களிடம் ஆதாரம் இருந்தால், எங்களிடம் தெரிவிக்கட்டும்.
இரு கொலைக்கு பின், சமூக வலைதளங்களில் பரப்பும் பொய் செய்திகளை கட்டுப்படுத்த தட்சிண கன்னடா மாவட்ட போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிலர் போலி பெயரில் கணக்கு துவக்கி, செய்தியை பரப்புகின்றனர். எனவே தான் உடனடியாக சம்பந்தப்பட்டவரை கைது செய்ய முடியவில்லை.
வகுப்புவாத பேச்சுக்கு எதிராக, பெல்தங்கடி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் பூஞ்சா மீது வழக்குப் பதிவு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தனிப்பட்ட வகையில் பேசியதன் மூலம், அவரின் தரம் என்னவென்று புரிந்துவிட்டது. எனவே, அவர் பற்றி பேச எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.