/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுநீர் கழிப்பதை தடுக்கும் பேனரில் பாரத மாதா படத்தை போடுவதா?
/
சிறுநீர் கழிப்பதை தடுக்கும் பேனரில் பாரத மாதா படத்தை போடுவதா?
சிறுநீர் கழிப்பதை தடுக்கும் பேனரில் பாரத மாதா படத்தை போடுவதா?
சிறுநீர் கழிப்பதை தடுக்கும் பேனரில் பாரத மாதா படத்தை போடுவதா?
ADDED : ஜூலை 01, 2025 03:31 AM

பெங்களூரு: காலி இடத்தில் குப்பை போடுவதையும், சிறுநீர் கழிப்பதையும் தடுக்கும் பேனர்களில் பாரத மாதா உருவப்படத்தை பயன்படுத்தும் பெங்களூரு மாநகராட்சி மீது பொது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பெங்களூரின் பொது இடங்களில் குப்பை கொட்டுவது, சிறுநீர் கழிப்பது அதிகரிக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் அசுத்தம் அடைகிறது. நோய் பரவும் அபாயமும் உள்ளது.
இதை கட்டுப்படுத்தும் நோக்கில், பல இடங்களில் மாநகராட்சி எச்சரிக்கை பேனர் வைத்துள்ளது.
பசவனகுடியின் காலியிடத்தில், பெங்களூரு மாநகராட்சி வைத்துள்ள பேனரில், 'குப்பை கொட்ட கூடாது. சிறுநீர் கழிக்கக் கூடாது.
விதிமுறையை மீறினால், அபராதம் விதிக்கப்படும்' என, பாரத மாதா உருவப்படத்துடன் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதை பார்த்த பலரும் கண்டித்துள்ளனர். ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்தியதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, ஹிந்து அமைப்பு பிரமுகர் புனித் கரெஹள்ளி கூறியதாவது:
சிறுநீர் கழிப்பதை, குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பேனர்களில் ஹிந்து கடவுள்களின் உருவப்படத்தை பயன்படுத்துவது சரியல்ல.
இது குறித்து, மாநகராட்சி மார்ஷலிடம் கேட்டபோது, கடவுளின் உருவப்படத்தை பயன்படுத்த கூடாது என்பதற்கு நீங்கள் யார் என, கேட்கிறார்.
இது போன்று வேற்று மதத்தவரின் கடவுள் படத்தை பயன்படுத்தும் தைரியம், மாநகராட்சிக்கு உள்ளதா? ஆர்.எஸ்.எஸ்., பாரத மாதா உருவப்படத்தை பூஜிக்கிறது. புனிதமான படத்தை, குப்பை போடுவது, சிறுநீர் கழிப்பதை தடுக்க பயன்படுத்துகின்றனர்.
தவறுகளை தட்டி கேட்கும் தைரியம், ஒவ்வொரு ஹிந்துக்களுக்கு வர வேண்டும். அப்போது தான் சமுதாயத்தில் மாற்றம் கொண்டு வர முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.