தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இன்னும் நன்றாக கத்தி கோஷம் எழுப்புங்கள் காங்., உறுப்பினர் சைகை

 இன்னும் நன்றாக கத்தி கோஷம் எழுப்புங்கள் காங்., உறுப்பினர் சைகை

 இன்னும் நன்றாக கத்தி கோஷம் எழுப்புங்கள் காங்., உறுப்பினர் சைகை


ADDED : ஆக 20, 2026 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2026 11:53 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு:  சட்டசபை நேற்று மதியம் ஒத்திவைக்கப்பட்ட போது, காங்கிரஸ் உறுப்பினர் நயனா, தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் இருக்கைக்கு அருகில் சென்று, 'விவாதிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன; நீங்கள் போராட்டத்தை கைவிடலாமே' என்று கூறினார். ஆனால் அவருக்கு யாரும் சரியான பதில் அளிக்கவில்லை.

 சட்டசபையில் ஆளுங்கட்சியினர் பேசுவது போன்ற புகைப்படங்கள் மட்டுமே அரசு சார்பில் வெளியிடப்படுகிறது. நாங்கள் பேசும் புகைப்படங்களை வெளியிட கூடாது என சபாநாயகர் எதுவும் உத்தரவிட்டு உள்ளாரா என, சட்டசபை செயலர் விசாலாட்சியிடம், எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி எழுப்பினார். 'அப்படி எதுவும் இல்லை சார்' என அவர் பதில் அளித்தார்.

 அமைச்சர் நாகேந்திரா ராஜினாமாவை வலியுறுத்தி, எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பிய போது, 'இன்னும் நன்றாக கத்தி கோஷம் எழுப்புங்கள்' என்று, மாண்டியா காங்கிரஸ் உறுப்பினர் ரவிகுமார் க னிகா சைகை செய்தார்.

 அமைச்சர் நாகேந்திரா ராஜினாமாவை வலியுறுத்தி, விதான் சவுதாவின் முதல் மாடியில், பா.ஜ., உறுப்பினர்கள் பேரணியாக சென்றனர்.

 சட்டசபையை முறையாக நடத்தவிடாமல், பா.ஜ., உறுப்பினர்கள் தடுப்பதாக கூறி, விதான் சவுதா வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன், காங்கிரஸ் உறுப்பினர்கள் குனிகல் ரங்கநாத், பத்ராவதி சங்கமேஸ்வர் போராட்டம் நடத்தினர்.

 அமைச்சர் பதவி கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த எம்.எல்.ஏ.,க்கள் யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல், வெங்கடேஷ் உள்ளிட்ட சிலர் நேற்று சட்டசபை க்கு வந்தனர்.

 போராட்டம் நடத்திய போது எதிர்க்கட்சி தலைவர் அசோக் கையில், பா.ஜ., உறுப்பினர் சி.சி.பாட்டீல் கருப்பு துணியை கட்டி விட்டார். ஆனால் துணி அவிழ்ந்து விழுந்தது. துணியை நெற்றியில் அசோக் கட்டினார். பக்கத்தில் நின்ற பா.ஜ., உறுப்பினர் சுனில்குமார், நன்றாக இல்லை என்றதும் துணியை கழற்றி அசோக் தோளில் போட்டு கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us