நிலம் கையகப்படுத்தும் அதிகாரி ரூ.18 கோடிக்கு சொத்து குவிப்பு
நிலம் கையகப்படுத்தும் அதிகாரி ரூ.18 கோடிக்கு சொத்து குவிப்பு
ADDED : ஆக 20, 2026 11:52 PM
பெங்களூரு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், நிலம் கையகப்படுத்தும் அதிகாரி, வருமானத்திற்கு அதிகமாக, 18 கோடி ரூபாய் சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நிலம் கையகப்படுத்தும் அதிகாரி மல்லிகார்ஜுன். இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் இவருக்கு சொந்தமான 11 இடங்களில், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.
இரண்டு வீடுகள், 100 ஏக்கர் விவசாய நிலம், 3.53 கோடி ரூபாய் ரொக்கம் என, 18.33 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து குவித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பல ஆண்டுகளாக, வங்கிக்கணக்கிற்கு வரும் தனது சம்பள பணத்தை அவர் எடுக்கவில்லை என்பதும் தெரிய வந்தது. வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை, லோக் ஆயுக்தா போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்கின்றனர்.
