காதலித்து ஏமாற்றிய பெண் ஏட்டு எஸ்.பி.,யிடம் எஸ்.ஐ., புகார்
காதலித்து ஏமாற்றிய பெண் ஏட்டு எஸ்.பி.,யிடம் எஸ்.ஐ., புகார்
ADDED : மே 06, 2026 04:48 AM

யாத்கிர்: பெண் ஏட்டு தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக எஸ்.ஐ., ஒருவர், மாவட்ட எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளார்.
ராய்ச்சூர் கிராமப்புற போலீஸ் நிலையத்தின் எஸ்.ஐ., வீரேஷ். இவர், அதே போலீஸ் நிலையத்தில் பெண் ஏட்டாக பணிபுரியும் விஜயஸ்ரீயை காதலித்து வந்தார். இருவரும் தனியாக வீடு எடுத்து நான்கு ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்நிலையில், விஜயஸ்ரீ தன்னை ஏமாற்றிவிட்டு வேறொருவரை திருமணம் செய்ய உள்ளதாக ராய்ச்சூர் எஸ்.பி., புட்டமடையாவிடம் வீரேஷ் நேற்று புகார் அளித்தார். இது குறித்து, வீரேஷ் கூறியதாவது:
விஜயஸ்ரீ, என்னிடமிருந்து 35 லட்சம் ரூபாய் பணம் வாங்கி உள்ளார். நாங்கள் ஒரே வீட்டில் தங்கியிருந்தோம். அப்போது, அவர் இரண்டு முறை கர்ப்பம் ஆனார். ஆனால், எனக்கு தெரியாமல் இரண்டு முறையும் கருக்கலைப்பு செய்து விட்டார். தற்போது, எனது சாதியை காரணம் காட்டி, வேறொருவரை திருமணம் செய்ய உள்ளார். அவர் என்னை ஏமாற்றி விட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
