/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மகனுக்கு வேலை இல்லாததால் எஸ்.ஐ., நாகராஜப்பா தற்கொலை
/
மகனுக்கு வேலை இல்லாததால் எஸ்.ஐ., நாகராஜப்பா தற்கொலை
மகனுக்கு வேலை இல்லாததால் எஸ்.ஐ., நாகராஜப்பா தற்கொலை
மகனுக்கு வேலை இல்லாததால் எஸ்.ஐ., நாகராஜப்பா தற்கொலை
ADDED : ஜூலை 08, 2025 11:52 PM

தாவணகெரே: ''தன் மகன் மீதான விரக்தியால், எஸ்.ஐ., நாகராஜப்பா தற்கொலை செய்து கொண்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது,'' என, மாவட்ட எஸ்.பி., உமா பிரசாந்த் தெரிவித்தார்.
தாவணகெரே போலீஸ் நிலைய எஸ்ஐ., நாகராஜப்பா, துமகூரில் உள்ள தனியார் லாட்ஜில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
இதுகுறித்து தாவணகெரே எஸ்.பி., உமா பிரசாந்த் நேற்று அளித்த பேட்டி:
தாவணகெரேயில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக, எஸ்.ஐ., நாகராஜப்பா தலைமையிலான குழுவினர் மத்திய பிரதேசத்துக்கு சென்றனர். அங்கு தங்க நகைகளை பறிமுதல் செய்து, ஜூன் 30ம் தேதி மாவட்டத்துக்கு திரும்பினர்.
அன்றைய தினம் வீட்டில் நடந்த குடும்ப பிரச்னை காரணமாக, ஜூலை 1ம் தேதி அதிகாலை 2:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறினார். துமகூரில் உள்ள லாட்ஜில் தங்கினார். ஜூலை 6ம் தேதி துாக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார். விசாரணையில், நாகராஜப்பாவின் மகனுக்கு பொறியியல் முடித்தும் வேலை கிடைக்கவில்லை. இதனால் தினமும் குடும்பத்தில் சண்டை நடந்துள்ளது. இதன் காரணமாக மனவேதனையில் இருந்த நாகராஜப்பா, தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.