UPDATED : நவ 15, 2026 12:00 AM
ADDED : நவ 14, 2026 11:04 PM
அ நிறம் | அளவு
கோலார்: கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகாவின், நங்கலி கிராமத்தின் பெரிய ஏரியில், சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன் தினம் இரவு, முல்பாகல் ஏ.எஸ்.பி., மோனிஷா தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், அங்கு சென்று சோதனை நடத்தினர். மணல் அள்ள பயன்படுத்திய டிராக்டர் மற்றும் ஒரு கனரக இயந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
போலீசார் நடவடிக்கை குறித்து, எஸ்.பி., கன்னிகா சிக்ரிவாலுக்கு, ஏ.எஸ்.பி., மோனிஷா அறிக்கை அளித்தார்.
அதன் படி, மணல் மாபியாவுக்கு மறைமுக ஒத்துழைப்பு கொடுத்த குற்றச்சாட்டின் படி, நங்கலி எஸ்.ஐ., வித்யாஸ்ரீ மற்றும் ஏட்டு பிரவீண் ஆகியோரை ‘சஸ்பெண்ட்’ செய்து, எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
