தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/தர்ஷன் – பவித்ரா உரையாடல் அரசு தரப்புக்கு புதிய ஆயுதம்

தர்ஷன் – பவித்ரா உரையாடல் அரசு தரப்புக்கு புதிய ஆயுதம்

தர்ஷன் – பவித்ரா உரையாடல் அரசு தரப்புக்கு புதிய ஆயுதம்


UPDATED : நவ 15, 2026 12:00 AM

ADDED : நவ 14, 2026 11:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2026 12:00 AM ADDED : நவ 14, 2026 11:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: காணொளி விசாரணையின் போது நடிகர் தர்ஷனும், நடிகை பவித்ரா கவுடாவும் பேசிக் கொண்ட விஷயம் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையே அவர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்த, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கு விசாரணை, கடந்த 12ம் தேதி காணொளி மூலம் நடந்தது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விசாரணை தடைபட்டது.

அப்போது, தர்ஷனும், பவித்ரா கவுடாவும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து கொண்டனர். இந்த உரையாடல் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இவர்களின் உரையாடல், அரசு வக்கீலுக்கு புதிய ஆயுதமாக மாறி உள்ளது. இந்த ஆடியோ பதிவு, நீதிபதியின் முன், சமர்ப்பிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

இரண்டு நிமிடங்கள் நீளும் இவர்களின் உரையாடல், நாளை நடக்கும் விசாரணையின் போது, நீதிபதியின் கவனத்துக்கு கொண்டு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us