தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கவர்னர் கெலாட் அடிப்படையில் நல்லவர் உண்மையை ஒப்புக்கொண்ட சித்தராமையா

 கவர்னர் கெலாட் அடிப்படையில் நல்லவர் உண்மையை ஒப்புக்கொண்ட சித்தராமையா

 கவர்னர் கெலாட் அடிப்படையில் நல்லவர் உண்மையை ஒப்புக்கொண்ட சித்தராமையா


ADDED : பிப் 03, 2026 06:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கவர்னர் கெலாட் அடிப்படையில் நல்லவர்,'' என, சட்டசபையில் முதல்வர் சித்தராமையா கூறினார்.

சட்டசபையில் கவர்னர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:

சட்டசபையின் முதல் நாளில் அரசின் உரையை கவர்னர் முழுதும் படிக்கவில்லை. சில வரிகளை மட்டுமே படித்தார். தேசிய கீதம் ஒலிக்கும் முன்பே அவசரம், அவசரமாக வெளியேறினார். எதிர்க்கட்சிகள் என்னை உதவியற்ற முதல்வர் என்று விமர்சித்து உள்ளனர்.

அவர்கள் சித்தாந்தம் வேறு; எங்கள் சித்தாந்தம் வேறு. அவர்கள் எங்கள் சித்தாந்தத்தை எதிர்க்கலாம். ஆனால், அரசியலமைப்பை எதிர்க்க கூடாது.

அனைவரும் அதை ஏற்று கொள்ள வேண்டும். கவர்னர் தாவர்சந்த் கெலாட் அடிப்படையில் நல்லவர். அவரை நாங்கள் எதிர்க்கவில்லை. அரசியலமைப்பு விதிமுறைப்படி உள்ள அரசின் உரையை படிக்காமல் அவர் புறக்கணிப்பது, அரசியலமைப்பிற்கு விரோதமானது.

பாராட்டு கடந்த 2022 முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜி.எஸ்.டி.,யால் 18,000 கோடி ரூபாய் முதல் 20,000 கோடி ரூபாய் வரை இழந்து உள்ளோம். நான்கு ஆண்டுகளில் 80,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. 16வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று கொண்டது. ஆனால் நமக்கு இன்னும் நிதி கிடைக்கவில்லை.

உணர்வு நாங்கள் மூன்று முறை பட்ஜெட் தாக்கல் செய்து, 6,000 கோடி ரூபாய் வரி விதித்து உள்ளோம். ஆனால் எதிர்க்கட்சிகள் 56,000 கோடி ரூபாய் வரிகள் விதித்து உள்ளதாக பொய் சொல்கின்றன. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் நாங்கள் விதித்த வரிகள் குறைவு. வளங்களை திரட்ட வரி உயர்வு தவிர்க்க முடியாதது.கர்நாடகாவின் வளர்ச்சி மாதிரியை மத்திய அமைச்சர்களை பாராட்டி உள்ளனர்.

கடந்த முறை நான் முதல்வராக இருந்த போது எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் உள்ளேன். என்னை யாராலும் மாற்ற முடியாது. எனக்கு உணர்வே இல்லை என்று கூறுகிறீர்கள். உங்கள் ஆட்சியில் சாம்ராஜ்நகரில் 36 பேர் ஆக்சிஜன் கிடைக்காமல் இறந்தனர். வங்கிகளில் கன்னடர்கள் வேலை செய்தனரா? அப்போது எல்லாம் உங்கள் உணர்வு எங்கு போனது.

தேவனஹள்ளியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை ஏற்று, நிலம் கையகப்படுத்துவதை கைவிட்டோம். உங்களை போன்று விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை இரண்டரை ஆண்டுகளில் நிறைவேற்றி உள்ளோம்.

முன்னாள் எம்.பி., ஜெயஸ்ரீயை அவமதித்த அதிகாரி மீது தவறு இருந்தால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கோகிலு லே - அவுட்டில் வீடுகள் இடிக்கப்பட்ட இடத்தில், வங்கதேசத்தினர் யாரும் வசிக்கவில்லை. ஒருவேளை வசித்தால், அவர்களுக்கு எக்காரணம் கொண்டும் வீடு வழங்கப்படாது

இவ்வாறு அவர் பேசினார்.

ஆனால், முதல்வரின் பதிலில் திருப்தி அடையாத எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us