ADDED : மே 04, 2025 12:24 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பெங்களூரு விதான்சவுதா முன், நேற்று நடந்த நிகழ்ச்சியில், நிதித்துறைக்கு புதிய வாகனங்களை முதல்வர் சித்தராமையா வழங்கினார்.
வாரிசு அடிப்படையில் நியமன உத்தரவு கடிதங்களை வழங்கி, முதல்வர் பேசியதாவது:
வரி ஏய்ப்பு செய்வோரை கண்டுபிடிக்கவும், வரி கசிவை கட்டுப்படுத்தவும் தேவையான அனைத்து வசதிகளையும், அரசு செய்து கொடுக்கும். இதற்கு அரசு தயாராக உள்ளது.
அவசியம் ஏற்பட்டால் கூடுதல் வாகனங்கள், ஊழியர்களை வழங்கும். ஆனால் வரி வசூல் இலக்கை எட்டுவது கட்டாயம். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
ஊதிய ஆணையம் சிபாரிசு செய்தபடியே ஊதியம் வழங்கப்படுகிறது. அதே அளவு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என, அரசு எதிர்பார்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
