தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சோனியா புத்தக விழாவில் சித்தராமையா அவமதிப்பு

சோனியா புத்தக விழாவில் சித்தராமையா அவமதிப்பு

சோனியா புத்தக விழாவில் சித்தராமையா அவமதிப்பு


UPDATED : நவ 18, 2026 12:00 AM

ADDED : நவ 17, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 12:00 AM ADDED : நவ 17, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: காங்., – பார்லி., குழு தலைவர் சோனியா எழுதிய சுயசரிதை புத்தகம் வெளியிட்டு விழாவில், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா அவமதிக்கப்பட்டதாக, அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

காங்., – பார்லி., குழு தலைவர் சோனியா தனது வாழ்க்கை பயணம் குறித்து, சுயசரிதை புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா, டில்லியில், நேற்று முன்தினம் நடந்தது.

முதல் வரிசையில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல், தமிழக முதல்வர் விஜய்; இரண்டாவது வரிசையில் கர்நாடக முதல்வர் சிவகுமார், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரும் அமர்ந்திருந்தனர்.

கர்நாடக முதல்வராக எட்டு ஆண்டுகள் பதவி வகித்தவர்; அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற பெருமையை பெற்ற சித்தராமையாவுக்கு, ஐந்தாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

ஐந்தாவது வரிசையில் சித்தராமையா அமர்ந்திருந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பதவியில் இல்லாததால் சித்தராமையாவை கட்சி மேலிடம் வேண்டுமென்றே அவமதித்து இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், இதுபற்றி சித்தராமையா எதுவும் கூறவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us