தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/காங்கிரஸ் பொருளாளராக ஜி.எச்.நாகராஜ் நியமனம்

காங்கிரஸ் பொருளாளராக ஜி.எச்.நாகராஜ் நியமனம்

காங்கிரஸ் பொருளாளராக ஜி.எச்.நாகராஜ் நியமனம்


UPDATED : நவ 18, 2026 12:00 AM

ADDED : நவ 17, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2026 12:00 AM ADDED : நவ 17, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக, ஜி.எச்.நாகராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக காங்கிரஸ் கமிட்டி பொருளாளராக பணியாற்றியவர் வினய் கார்த்திக், எம்.எல்.சி., இவரது பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில், சிக்கபல்லாபூரை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர், ஜி.எச்.நாகராஜ், 79, பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை, காங்கிரஸ் தேசிய பொது செயலர் வேணுகோபால் நேற்று பிறப்பித்துள்ளார். கடந்த, 2008ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சிக்கபல்லாபூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்த நாகராஜ், பின், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இவரது மகன் வினய் ஷியாம், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக உள்ளார். கடந்த, 2023 சட்டசபை தேர்தலில் சிக்கபல்லாபூர் தொகுதியில் போட்டியிட வினய் ஷியாம் எதிர்பார்த்தார். ஆனால், அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் கட்சி மீது நாகராஜ் அதிருப்தி அடைந்தார். அரசியல் நடவடிக்கையில் ஒதுங்கி இருந்தார்.

கடந்த மாதம் நாகராஜை, கட்சி தலைவர் ஹரிபிரசாத் சந்தித்து பேசினார். அதற்கு பின் தான், நேற்று அவருக்கு பதவி கிடைத்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us