தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'அதிக கடன் வாங்கியவர் சித்தராமையா' நிர்வாக சீர்கேடுகளை பட்டியலிட்ட ம.ஜ.த.,

 'அதிக கடன் வாங்கியவர் சித்தராமையா' நிர்வாக சீர்கேடுகளை பட்டியலிட்ட ம.ஜ.த.,

 'அதிக கடன் வாங்கியவர் சித்தராமையா' நிர்வாக சீர்கேடுகளை பட்டியலிட்ட ம.ஜ.த.,


ADDED : ஜன 07, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

மாநிலத்தில் சித்தராமையா ஆட்சி காலத்தில் ஏற்பட்ட சீர்கேடுகள் குறித்து, ம.ஜ.த., தனது சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டி உள்ளது.

கர்நாடகாவில் நீண்ட காலம் முதல்வராக பதவி வகித்த சித்தராமையாவின் காலத்தில் நடந்த நிர்வாக சீர்கேடுகளின் பட்டியல் குறித்து, தனது, 'எக்ஸ்' தளத்தி ல் ம.ஜ.த., குறிப்பிட்டு உள்ளதாவது:

 மா நி லத்தில் அதிகபட்ச வகுப்புவாத கலவரங்கள், வன்முறைகள்

 அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள் தற்கொலைகள்

 ஊழலில் கர்நாடகா நம்பர் 1 மாநிலம்

 ஊழல் குற்றச்சாட்டுகளில், அதிக காங்., எம்.எல்.ஏ., க்கள் சிறையில் அடைப்பு

 அதிக எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகள் தற்கொலை

 வால்மீகி ஆணையம், போவி ஆணையம், அம்பேத்கர் ஆணையம், எஸ்.சி., - எஸ்.டி., மானியங்கள் உட்பட தலித்களின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கொள்ளை

 விலையே ற்றத்தின் மூலம் சாமானிய மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியது

 சாலைகளில் உள்ள குழிகளை மூடாததால், பல அப்பாவி மக்கள் மரணம்

 ஜாதிகளுக்கு இடையே வெறுப்பை துாண்டியவர்

 முதல்வராக அதிக கடன் வாங்கியவர் என்ற சாதனை இன்னும் சித்தராமையாவிடமே உள்ளது.

இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us