/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'பதவியின் கவுரவத்தை இழக்கும் சித்தராமையா'
/
'பதவியின் கவுரவத்தை இழக்கும் சித்தராமையா'
ADDED : டிச 09, 2025 06:25 AM

ஷிவமொக்கா: ''முஸ்லிம்களை திருப்திபடுத்த, பகவத் கீதை படிப்பவர்கள் மனுதர்மவாதிகள் என்று கூறி, முதல்வர் சித்தராமையா தன் பதவியின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் இழந்து வருகிறார்,'' என, முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
முதல்வர் சித்தராமையா, 'பகவத் கீதையை படிப்பவர்கள் மனுதர்மவாதிகள்' என்று நேற்று முன்தினம் கூறியிருந்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷிவமொக்காவில் நேற்று முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா அளித்த பேட்டி:
முஸ்லிம்களை திருப்திபடுத்த, பகவத் கீதை படிப்பவர்கள் மனுதர்மவாதிகள் என்று கூறி, முதல்வர் சித்தராமையா தன் பதவியின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் இழந்து வருகிறார். பொறுப்பற்ற அறிக்கையை வெளியிட்டது வருத்தம் அளிக்கிறது. இந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
பகவத் கீதை என்பது உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அறிவை அதிகரிக்கும் ஒரு புத்தகம். மகாத்மா காந்தியின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பங்கு வகித்தது. இதுபோன்ற ஒரு புத்தகத்தை பற்றி பேசுவதும், அதை படிப்பவர்களை 'மனுதர்மவாதிகள்' என்று அழைப்பதும் முதல்வருக்கு பொருந்தாது.
முதலில் பகவத்தை கீதையை அவர் படிக்கட்டும். அவருக்கு வலிமை இருந்தால், குர் ஆன் அல்லது பைபிள் பற்றி இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடட்டும். அவ்வாறு அவர் பேசினால், ஒரு நிமிடம் கூட முதல்வர் பதவியில் இருக்க முடியாது. முஸ்லிம்களை திருப்திபடுத்த, பைத்தியம் போன்று பேசுகிறார். இந்த பேச்சு, அவரின் முதல்வர் பதவி முடிவுக்கு வந்துவிட்டது என்பதை உணர்த் துகிறது.
பசுவதை தடுப்பு சட்டத்தை திருத்த காங்கிரஸ் நடவடிக்கை எடுத்து வருவது அக்கட்சியின் மோசமான மரபை காட்டுகிறது. வெறுப்பு பேச்சு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால், முதலில் சித்தராமையா தான் சிறையில் அடைக்கப்படுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

