தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காவேரி இல்லம் புதுப்பிப்பு காய் நகர்த்தும் சித்தராமையா

 காவேரி இல்லம் புதுப்பிப்பு காய் நகர்த்தும் சித்தராமையா

 காவேரி இல்லம் புதுப்பிப்பு காய் நகர்த்தும் சித்தராமையா


ADDED : பிப் 27, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2026 05:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: முதல்வர் மாற்றம் குறித்த விவாதம் நடந்து வரும் நிலையில், முதல்வர் சித்தராமையா தன் காவேரி இல்லத்தை புதுப்பிப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த, 2023ன் சட்டசபை தேர்தல் முடிந்த பின், முதல்வராக பொறுப்பேற்ற சித்தராமையா, அரசின், 'காவேரி' இல்லத்தில் குடியேறினார். அவருக்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவில் இல்லம் புதுப்பிக்கப்பட்டது.

அவரது தலைமையிலான காங்கிரஸ் அரசு, மூன்றாவது ஆண்டை நெருங்கும் நிலையில், காவிரி இல்லத்தை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்துள்ளார். தற்போது கீழ் தளத்தை புதுப்பிக்கும் பணிகள், மும்முரமாக நடந்து வருகின்றன. பொதுவாக ஆட்சியில் நீடிக்கும் போது, முதல்வர் இல்லத்தை புதுப்பிப்பது சகஜம்.

ஆனால், தற்போது அரசில், முதல்வர் மாற்றம் குறித்த சர்ச்சை நடக்கிறது. முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்பதில், துணை முதல்வர் சிவகுமார் அதி தீவிரம் காட்டுகிறார். அரசு அமைந்த போது செய்து கொண்ட ஒப்பந்தப்படி, சித்தராமையா நடந்து கொள்ள வேண்டும். தனக்கு முதல்வர் பதவியை விட்டுத்தரும்படி, சிவகுமார் மறைமுகமாக பல முறை கூறியுள்ளார். ஆனால், பதவியை விட்டுத்தர சித்தராமையா தயாராக இல்லை.

கர்நாடகாவிலேயே அதிக நாட்கள், முதல்வராக இருந்து சாதனை படைத்த முதல்வர் சித்தராமையா, மார்ச், 6ல் பட்ஜெட் தாக்கலுக்கு தயாராகிறார். பட்ஜெட் தாக்கல் முடிந்த பின், முதல்வர் மாற்றப்படலாம் என, சிவகுமார் ஆதரவாளர்கள் எதிர்பார்த்த நிலையில், காவேரி இல்லத்தை புதுப்பிப்பதன் மூலம், முதல்வர் சித்தராமையா புதிதாக காய் நகர்த்துகிறார்.

அவரது செயல்பாடு, சிவகுமார் ஆதரவாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் இல்லத்தை புதுப்பிப்பதன் மூலம், தற்போதைக்கு தன்னால், முதல்வர் பதவியை விட்டுத்தர முடியாது என, மறைமுகமாக உணர்த்துகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us