/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் போலீசாருக்கு சித்தராமையா உத்தரவு
/
சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் போலீசாருக்கு சித்தராமையா உத்தரவு
சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் போலீசாருக்கு சித்தராமையா உத்தரவு
சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் போலீசாருக்கு சித்தராமையா உத்தரவு
ADDED : ஏப் 03, 2025 08:00 AM

பெங்களூரு : “சட்டம் - ஒழுங்கு, முதலீடு ஈர்ப்பு, வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும் விஷயங்கள், ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்னையாகும். இதற்கு தீர்வு காண, சட்டம் - ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும்,” என, முதல்வர் சித்தராமையா பேசினார்.
பெங்களூரின், கோரமங்களா அணிவகுப்பு மைதானத்தில் போலீஸ் கொடி தின நிகழ்ச்சி, நேற்று நடந்தது. சாதனை செய்த போலீசாருக்கு, முதல்வர் சித்தராமையா தங்கப் பதக்கம் வழங்கி பேசியதாவது:
மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து, முதல்வரின் தங்கப் பதக்கங்களை இம்முறை வழங்குகிறோம். பதக்கம் பெற்ற அனைவருக்கும் பாராட்டுக்கள்.
தொழில்நுட்பங்கள் மேம்படுவதால், சைபர் குற்றங்களும் பரவலாக அதிகரிக்கிறது. அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும். போதைப்பொருட்கள் இல்லாத மாநிலமாக்குவது, என் குறிக்கோள். இதற்காக அதிகம் உழைக்க வேண்டும். போதைப் பொருளை வேருடன் பிடுங்கி எறிய வேண்டும்.
பதக்கங்களை பெற்றவர்கள், மற்றவருக்கு உந்துதலாக இருக்க வேண்டும். முதல்வர் பதக்கம் பெற, நேர்மையான முறையில் பணியாற்றி, திறமையை காட்ட வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளில், குற்றங்களின் எண்ணிக்கை குறைகிறது. இது மேலும் குறைய வேண்டும்.
சட்டம் - ஒழுங்கு, முதலீடு ஈர்ப்பு, வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும் விஷயங்களுக்கு, ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ளது. வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்னையாகும். இதற்கு தீர்வு காண, சட்டம் - ஒழுங்கு நன்றாக இருக்க வேண்டும்.
ஜெர்மனி நாட்டு பிரதமர், மக்கள் பிரதிநிதிகள் கர்நாடக போலீஸ் துறையின் திறமையை பாராட்டியுள்ளனர். இது மிகவும் பெருமையான விஷயமாகும். போலீசாரின் கோரிக்கைகளை நிறைவேற்ற, அரசு தயாராக உள்ளது. அரசு உங்களுடன் உள்ளது. ஆனால் கடமை தவறினால், அரசு சகிக்காது.
ரோந்து பணியை போலீசார் மேலும் பலப்படுத்த வேண்டும். குண்டர்கள், ரவுடியிசத்தை முற்றிலுமாக ஒடுக்க வேண்டும். இதற்கு தேவையான ஒத்துழைப்பு, சலுகைகளை வழங்க அரசு தயாராக உள்ளது.
சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் போலீஸ் துறை மற்றும் போலீசாரின் நலனுக்காக அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

