sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 சிவகுமாருக்கு சிறந்த எதிர்காலம் புகழ்ந்து தள்ளிய சித்தராமையா

/

 சிவகுமாருக்கு சிறந்த எதிர்காலம் புகழ்ந்து தள்ளிய சித்தராமையா

 சிவகுமாருக்கு சிறந்த எதிர்காலம் புகழ்ந்து தள்ளிய சித்தராமையா

 சிவகுமாருக்கு சிறந்த எதிர்காலம் புகழ்ந்து தள்ளிய சித்தராமையா


ADDED : மார் 11, 2026 05:40 AM

Google News

ADDED : மார் 11, 2026 05:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: சிவகுமாருக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, தனது,'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவு:

கடந்த ஆறு ஆண்டுகளாக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் துணை முதல்வர் சிவகுமாருக்கு என்னுடைய வாழ்த்துகள். சிவகுமாரின் கடின உழைப்பு, வளர்ந்து வரும் தலைவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கிறது.

பா.ஜ.,வினர் பொய் வழக்குப் பதிவு செய்து, அவரை துன்புறுத்தினர். அப்போதும், அவர் காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாக இருந்தார். காங்கிரஸ் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அவருடைய கடின உழைப்பும் காரணமாகும். மாநிலத்தை அமைதிப் பூங்காவாக மாற்றும் பணியில் பெரிதும் உதவினார்.

என்னை விட வயதில் இளையவரான சிவகுமாருக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. 2028ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அனைவரின் விருப்பமும் கூட. இதற்காக கடுமையாக உழைக்கத் தயாராக உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us