தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அமைச்சரவை பட்டியலுக்கு ஒப்புதல் பெற சித்தராமையா, சிவகுமார் டில்லி பயணம்

 அமைச்சரவை பட்டியலுக்கு ஒப்புதல் பெற சித்தராமையா, சிவகுமார் டில்லி பயணம்

 அமைச்சரவை பட்டியலுக்கு ஒப்புதல் பெற சித்தராமையா, சிவகுமார் டில்லி பயணம்


ADDED : ஜூன் 02, 2026 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2026 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: அமைச்சரவை பட்டியலுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, சித்தராமையா, சிவகுமார் ஒரே விமானத்தில் டில்லிக்கு சென்றுள்ளனர்.

கர்நாடகாவின் புதிய முதல்வராக சிவகுமார் நாளை பதவியேற்கிறார். இவருடன் இணைந்து யார், யார் அமைச்சராக பதவி ஏற்க உள்ளனர் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

சித்தராமையாவின் அமைச்சரவையில் பணியாற்றிய அமைச்சர்கள் சிலர், தங்களுக்கு மீண்டும் பதவி வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று கோரஸ் பாடிய, எம்.எல்.ஏ.,க்களில் சிலரும் அமைச்சர் பதவி கேட்கின்றனர். தனது ஆதரவாளர்கள் யாருக்கெல்லாம் அமைச்சர் பதவி வேண்டும் என்ற பட்டியலை, கட்சி மேலிடத்திற்கு சித்தராமையா அனுப்பி வைத்து உள்ளார்.

சிவகுமாரும், தன் பங்கிற்கு யார், யாருக்கு அமைச்சர் பதவி என்று பட்டியல் தயாரித்து உள்ளார். இந்த பட்டியலுக்கு ஒப்புதல் பெற சித்தராமையாவும், சிவகுமாரும் பெங்களூரில் இருந்து நேற்று, ஒரே விமானத்தில் டில்லி சென்றனர்.

இவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் மஹாதேவப்பா, ஜார்ஜ் ஆகியோரும் சென்றனர்.

மேலிட தலைவர்களை சந்தித்து அமைச்சரவை பட்டியலை காட்டி உள்ளனர். அதில் சிலரின் பெயரை, மேலிட தலைவர்கள் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் சிவகுமாரின் பதவியேற்பு விழாவுக்காக, லோக்பவனில் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த பணிகளை சிவகுமார் தம்பி சுரேஷ், மாகடி எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணா நேற்று ஆய்வு செய்தனர். இது ஒருபுறம் இருக்க, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் என 30க்கும் மேற்பட்டோர் டில்லி சென்று அமைச்சர் பதவிக்காக, மேலிட தலைவர்களை சந்தித்து வருகின்றனர்.

ஹாசன் மாவட்டத்தின் ஒரே காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான சிவலிங்கேகவுடாவுக்கு, அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று, ஹாசன் காங்கிரஸ் எம்.பி., ஷ்ரேயஸ் படேல் கோரிக்கை வைத்து உள்ளார். ராகுலுக்கும் அவர் கடிதம் எழுதி உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us