தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'அரசியலில் சித்தராமையா ஓய்வு பெறக்கூடாது'

 'அரசியலில் சித்தராமையா ஓய்வு பெறக்கூடாது'

 'அரசியலில் சித்தராமையா ஓய்வு பெறக்கூடாது'


ADDED : ஆக 13, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 12:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ௦'சித்தராமையா, அரசியலில் இருந்து, ஓய்வுபெறும் எண்ணத்தை விட்டு, முதல்வர் சிவகுமாருடன் கைகோர்த்து, காங்கிரசை பலப்படுத்த வேண்டும்,'' என, முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் வலியுறுத்தினார்.

முன்னாள் முதல்வர் சித்தராமையாவின், பிறந்த நாளை முன்னிட்டு, மைசூரின் காங்கிரஸ் அலுவலகத்தில், நேற்று நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் பங்கேற்றார்.

அவர் பேசியதாவது:

சித்தராமையா காங்கிரசுக்கு வருவதற்கு முன்பே, கட்சியின் அஸ்திவாரம் பலமாக இருந்தது. ஏற்கனவே கட்டிய வீட்டுக்குள், அவர் அடியெடுத்து வைத்திருந்தார்.

முதல்வர் பதவியை விட்டு விலகியதும், தன் பணி முடிந்து விட்டது என, நினைத்து ஓய்வு பெறுவது சரியல்ல. சித்தராமையா கட்சிப்பணியை தொடர வேண்டும்.

கட்சியின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, கட்சியை பலப்படுத்த மூத்த தலைவர்கள் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும்.

அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணத்தை விட்டு, முதல்வர் சிவகுமாருடன் கைகோர்த்து, கட்சியை பலப்படுத்துவதில், ஆர்வம் கா ட்ட வேண்டும்.

கடந்த, 1969ல் நடந்த, உட்கட்சி பூசலால் காங்கிரஸ் இரண்டு துண்டானது. அப்போது தேவராஜ் அர்ஸ், பல வலிகள், சவால்களை எதிர்கொள்ள வேண்டி வந்தது. ஆனால் சித்தராமையாவுக்கு, அது போன்ற கடினமான சூழ்நிலை ஏதும் ஏற்படவில்லை.

ஏற்க னவே கட்டி முடித்து தயாராக இருந்த வீட்டில் குடியேறிய அவர், தன் கடமை முடிந்தது என, கருதாமல் மாநில சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கட்சியை பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us