/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையாவுக்கு... சிக்கல்!:வழக்கு பதிய கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றது கோர்ட்
/
போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையாவுக்கு... சிக்கல்!:வழக்கு பதிய கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றது கோர்ட்
போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையாவுக்கு... சிக்கல்!:வழக்கு பதிய கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றது கோர்ட்
போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையாவுக்கு... சிக்கல்!:வழக்கு பதிய கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்றது கோர்ட்
ADDED : செப் 27, 2025 04:58 AM

அத்தியாவசிய பொருட்கள் மீதான விலையை அடிக்கடி உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து, ஜூன் 6ம் தேதி பெலகாவியில் காங்கிரஸ் சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முதல்வர் சித்தராமையா பேசிக் கொண்டு இருந்தபோது, கூட்டத்திற்குள் இருந்த பா.ஜ., பெண் தொண்டர்கள், முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
இதனால் கோபம் அடைந்த சித்தராமையா, 'எஸ்.பி., எங்கே?' என ஆவேசமாக கேட்டார். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அப்போதைய தார்வாட் கூடுதல் எஸ்.பி., நாராயண் பரமணி மேடைக்குச் சென்றார். கடும் கோபத்தில் இருந்த சித்தராமையா, நாராயண் பரமணியை அடிக்க கை ஓங்கினார்.
முட்டுக் கொடுப்பு சுதாரித்துக் கொண்ட போலீஸ் அதிகாரி பின்நோக்கி நகர்ந்ததால், முதல்வர் அத்துடன் நின்று கொண்டார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
பொது இடத்தில் போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையா, தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. 'போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கவே இல்லை; கையை நீட்டி ஆவேசமாக பேசினேன்' என, முதல்வர் விளக்கம் அளித்தார். சில அமைச்சர்களும் அவருக்கு முட்டுக் கொடுத்தனர்.
ஆனாலும் நடந்த சம்பவத்தால் மிகவும் மன உளைச்சல் அடைந்த போலீஸ் அதிகாரி நாராயண் பரமணி, விருப்ப ஓய்வு கேட்டு அரசுக்கு கடிதம் எழுதினார். இது சித்தராமையாவுக்கும், அரசுக்கும் மேலும் நெருக்கடியை ஏற்படுத்தின.
மூத்த போலீஸ் அதிகாரிகள் மூலம் நாராயண் பரமணியை, அரசு சமாதானப்படுத்தியது. பெலகாவி நகர டி.சி.பி.,யாக அவர் நியமிக்கப்பட்டார். இத்துடன் பிரச்னை முடிந்துவிட்டது என்று நினைத்திருந்த சித்தராமையாவுக்கு, இப்போது புதிய சிக்கல் துவங்கி உள்ளது.
6ல் விசாரணை போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய, போலீசாருக்கு உத்தரவிடக் கோரி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், பெலகாவியை சேர்ந்த ஆர்.டி.ஐ., ஆர்வலர் பீமப்பா காடத் மனுத் தாக்கல் செய்திருந்தார். சம்பவம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களையும் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தற்போது விசாரணைக்கு ஏற்றுள்ளது. வரும் 6ம் தேதியில் இருந்து மனு மீது விசாரணை நடக்க உள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி நீதிமன்றம் முடிவு எடுக்கும்.
நீதி மீது நம்பிக்கை பொறுப்பான பதவியில் இருக்கும் சித்தராமையாவுக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும், பொது இடத்தில் அரசு அதிகாரியை அடிக்க கை ஓங்கியது தவறு. இது மற்ற அதிகாரிகளின் மனநிலையை பாதித்து இருக்கும். பாதிக்கப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்தால், அவர் அனுபவித்த வேதனை சரியாகி விடுமா? தவறு செய்த முதல்வர் மீது, பெலகாவி கேம்ப் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். மூன்றாம் தரப்பு என்று கூறி, என் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் நீதிமன்றத்தின் கதவை தட்டி உள்ளேன். நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. பீமப்பா கடாத் வழக்கு தொடுத்தவர்