/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையாவுக்கு உடல்நல குறைவு
/
சித்தராமையாவுக்கு உடல்நல குறைவு
ADDED : டிச 18, 2025 07:13 AM

பெலகாவி: முதல்வர் சித்தராமையாவுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. சட்டசபைக்கு நேற்று வரவில்லை.
பெலகாவியில் நடக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் நேற்று காலை முதல்வர் கலந்து கொண்டார். மதியம் அவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர் மருந்து, மாத்திரை வழங்கி ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதனால் நேற்று மதியம் சட்டசபைக்கு அவர் வரவில்லை.
பா.ஜ., - எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளி, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா ஆகியோர் நேரில் சென்று சித்தராமையாவிடம் நலம் விசாரித்தனர். அவர் நன்றாக இருப்பதாக கூறினர்.
சித்தராமையாவுக்கு வயிற்றுபோக்கு ஏற்பட்டு உள்ளது. தற்போது ஓய்வில் உள்ளார். நாளை (இன்று) சட்டசபைக்கு வருவார் என்று, அவரது மகனும், எம்.எல்.சி.,யுமான யதீந்திரா கூறினார்.

