/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
துப்புரவு ஊழியர்கள் நிரந்தரம் சித்தராமையா திட்டவட்டம்
/
துப்புரவு ஊழியர்கள் நிரந்தரம் சித்தராமையா திட்டவட்டம்
துப்புரவு ஊழியர்கள் நிரந்தரம் சித்தராமையா திட்டவட்டம்
துப்புரவு ஊழியர்கள் நிரந்தரம் சித்தராமையா திட்டவட்டம்
ADDED : ஏப் 21, 2025 05:11 AM

பெலகாவி: ''அனைத்து உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களையும் நிரந்தரமாக்கும் பணிகள் நடந்து வருகின்றன,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெலகாவி மாவட்டத்தில் நேற்று 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய பல மாடி கலைக்கூடத்தை முதல்வர் சித்தராமையா திறந்து வைத்தார்.
அவர் பேசியதாவது:
கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது, அனைத்து மாநகராட்சியில் பணியாற்றி வரும், துப்புரவு ஒப்பந்த ஊழியர்கள் நிரந்தரமாக்க முடிவு செய்யப்பட்டது.
இவர்களுக்கு, ஒப்பந்ததாரர்கள் மூலம், ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. இதை மாற்றி, குறைந்தபட்ச ஊதியத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு, மாதம் 17,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது, மாநகராட்சி, உள்ளாட்சி, பட்டண பஞ்சாயத்து, பேரூராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வரும் துப்புரவு தொழிலாளர்களை நிரந்தரமாக்க, அரசு முடிவு செய்துள்ளது. அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்படும்.
மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீத நிதியுடன், ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடக்கின்றன. பெலகாவியில் மட்டும் 150 பணிகள் நடந்து வருகின்றன. இதில் 102 பணிகள் முடிந்துவிட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.

